ஆப்நகரம்

குடியரசு தினத்தில் அதிரப் போகும் டெல்லி; இனி எல்லாம் போலீஸ் கையில்...!

வரும் ஜனவரி 26ஆம் தேதி விவசாயிகள் டெல்லிக்குள் ட்ராக்டர் பேரணி நடத்தவுள்ள சூழலில் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 18 Jan 2021, 1:17 pm
Samayam Tamil Tractor Rally in Delhi
தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதிகளை முற்றுகையிட்டு பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேசமயம் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறாமல் மத்திய அரசும் பிடிவாதமாக இருந்து வருகிறது. இதற்கிடையில் டெல்லி குளிரால் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஏராளமான விவசாயிகள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளை கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

அப்போது 4 பேர் கொண்ட கமிட்டியை அமைத்து விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. இதற்காக குழு அமைக்கப்பட்ட நிலையில், திடீரென அதன் உறுப்பினர்களில் ஒருவரான புபிந்தர் சிங் மன் ராஜினாமா செய்து வெளியேறினார். இதையடுத்து புதிய உறுப்பினரை நியமிப்பது பற்றி உச்ச நீதிமன்றம் விரைவில் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து 5 நாட்களுக்கு தொடர் மின்வெட்டு; பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி!
இந்த சூழலில் வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் அன்று டெல்லிக்குள் பிரம்மாண்ட ட்ராக்டர் பேரணி நடத்தப் போவதாக விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டெல்லி போலீசார் மூலம் மத்திய அரசு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில் குடியரசுத் தின கொண்டாட்டங்களுக்கு இடையூறு செய்யும் வகையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினால் அது நமது தேசத்திற்கே சங்கடத்தை ஏற்படுத்தும்.

எனவே இந்த பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், டெல்லிக்குள் விவசாயிகளை அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்று டெல்லி போலீசார் தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் தான் எத்தனை பேர் வரலாம்.

ஒரு வட்டத்தில் இருந்து இன்னொரு வட்டத்தில் சிக்கிய விஜய்
அதற்கு என்னென்ன கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் போது போலீசார் மூலம் தனது அதிகாரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அடுத்த செய்தி