ஆப்நகரம்

நீட் தேர்வு முடிவுகளை ரத்துசெய்ய முடியாது: உச்சநீதிமன்றம்

மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடைபெற்று வரும் நிலையில் நீட் தேர்வு முடிவுகள்ளை ரத்துசெய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

TNN 10 Aug 2017, 1:19 pm
மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடைபெற்று வரும் நிலையில் நீட் தேர்வு முடிவுகள்ளை ரத்துசெய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil supreme court pulls up cbse for different neet question papers
நீட் தேர்வு முடிவுகளை ரத்துசெய்ய முடியாது: உச்சநீதிமன்றம்


கடந்த மே 7ஆம் தேதி நடத்தப்பட்ட மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வின் பிராந்திய மொழி வினாத்தாள்களில் கேள்விகள் மிகவும் கடினமானதாக இருந்தன என்றும் இந்தி மற்றும் ஆங்கில வினாத்தாள்கள் எளிமையானவையாக இருந்தன என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

தேர்வு முடிந்து முடிவுகளும் வெளியாகி, இப்போது மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகளை ரத்துசெய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பிராந்திய மொழிகளில் மாறுபட்ட வினாத்தாள்களை உருவாக்கியதற்காக சிபிஎஸ்சி நிர்வாகத்துக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள்களே அளிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், தேர்வு முடிவுகள் வெளியாகி அதன் அடிப்படையில் கவுன்சிலிங் நடைபெற்று வரும் நிலையில் நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்வது கடினமானது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வை இந்த ஆண்டு 11.35 லட்சம் பேர் எழுதினர். அவர்களில் 6.11 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அடுத்த செய்தி