ஆப்நகரம்

முத்தலாக் வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

முத்தலாக் வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

TNN 30 Mar 2017, 3:48 pm
புதுதில்லி: முத்தலாக் வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Samayam Tamil supreme court refers triple talaq case to 5 judge constitutional bench
முத்தலாக் வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்: உச்சநீதிமன்றம் உத்தரவு


இஸ்லாமிய முறைப்படி 'தலாக்' எனும் வார்த்தையை தொடர்ந்து 3 முறை சொல்லி விவாகரத்து செய்துக் கொள்ளும் முறையால் பெண்களுக்கு பாரபட்சமான நீதி வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து தலாக் முறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இது குறித்து பதிலளிக்கும்படி, அனைத்திந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்டோருக்கு, தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு, 'நோட்டீஸ்' அனுப்பியது. இந்நிலையில், இஸ்லாமிய சமூகத்தில் முத்தலாக் முறைப்படி விவாகரத்து செய்யும் நடைமுறையை அரசியல் சாசன விதிகளின்படி ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

முன்னதாக தலாக் முறையை நியாயப்படுத்தும் விதமாக இந்தியாவின் உயர்மட்ட இஸ்லாமிய சட்ட வாரியம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தில் வாதத்தை பதிவு செய்திருந்தது. அதில், உச்சநீதிமன்றம் மத சுதந்திரத்தில் தலையிடக்கூடாது என்றும், சமூக சீர்திருத்தம் எனக் கூறி தனிப்பட்ட சட்டங்களை மாற்றியமைக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொல்லப்பட்ட முத்தலாக் வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. இவ்வழக்கு வரும் மே மாதம் 11ஆம் தேதி முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.

The Supreme Court decided today that a five-judge constitution bench will rule on the constitutional validity of the practice of triple talaq, 'nikah halala' and polygamy among Muslims. The hearing will begin May 11.

அடுத்த செய்தி