ஆப்நகரம்

இந்தியாவை பாரத் என்று பெயர் மாற்றும் வழக்கு: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

இந்தியாவின் பெயரை மாற்றக்கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Samayam Tamil 3 Jun 2020, 4:34 pm
இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு மறுத்துள்ளது.
Samayam Tamil supreme court refuses to entertain plea for name change india into bharat
இந்தியாவை பாரத் என்று பெயர் மாற்றும் வழக்கு: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு


இந்த மனுவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டா மற்றும் நீதிபதிகள் ஏ.ஏஸ்.போபண்னா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின்போது, ஏற்கனவே இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை பாரத் என்றும் அழைக்கும்போது ஏன் இந்த மனு என்று கேள்வி எழுப்பினர்.



அதற்கு, மனுதாரர் தரப்பு வழக்கறிஞரான அஸ்வின் வைஷ், 'இந்தியா' என்ற பெயர் கிரேக்க வார்த்தையான "இண்டிகா" என்பதிலிருந்து உருவானது என்று வாதிட்டார், மேலும் இந்தப் பெயர் மாற்றம் என்பது இந்தியா என்ற வார்த்தையை நீக்குவது குறித்தும் கேட்பதாக அவர் வாதாடினார்.

"இந்தியா என்ற பெயர் இண்டிகா என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்பட்ட பெயர்” என்று அந்த மனு

மேலும் இந்த மனுவை சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்குன் முன் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கு அனுமதிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கை மட்டும் நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டது.

மேலும் அந்த மனுவில் "பாரத்" என்ற "அசல் மற்றும் உண்மையான பெயர்" மூலம் நாட்டை அங்கீகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும், இந்தியாவின்பல நகரங்கள் இதனை எதிர்பார்க்கிறார்கள் என்றும் தெரிவித்தது.

இந்த பெயர் மாற்றம், மனுதாரரின் கூற்றுப்படி, நாட்டின் குடிமக்கள் மீதிருக்கும் காலனித்துவ அடையாளத்தை மாற்றுவதை இந்தப் பெயர் மாற்றம் உறுதி செய்யும். மேலும் ஆங்கிலப் பெயர்களை நீக்குவது அதற்கான குறியீடாக இருக்கும். இதன் மூலம் "எங்கள் சொந்த தேசிய அடையாளத்தின் பெருமை உணர்வை அதிகரிக்க முடியும்" என்றும் அந்த மனு தெரிவித்தது.

"இந்தியா என்ற சொல் பாரத் என்று மாற்றப்படுவது, நம் முன்னோர்களால் கடுமையாக போராடிய சுதந்திரத்தை நியாயப்படுத்தும்."
மனுதாரர்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 1 ஐ இதற்காக திருத்த வேண்டும் என்றும், அது இந்திய அரசியலமைப்பின் ஷரத்து 12இன் கீழ் வரையறுக்கப்பட்ட ‘நாடு’ என்ற அரசாங்கத்தின் கடமையாகும் என்றும் இந்த மனு கோரிக்கை வைத்தது.

மேலும், ஷரத்து 21 இன் கீழ் உள்ள அடிப்படை உரிமையானது, "ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது சொந்த நாட்டை பாரத் என்று அழைப்பதற்கு சம உரிமை உண்டு",என்று கூடுதலாக சேர்க்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது.

வழக்கறிஞர் ராஜ் கிஷோர் சவுத்ரி மூலம் மனு தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை நிராகரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு முன்பு இதனை ஒரு முன்மொழிவாக எடுத்துக்கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் உறுப்பு இந்தியாவை பாரத் என்றும்தான் சொல்கிறது. இந்நிலையில், பாரத் என்று நாட்டுக்கே பெயர் மாற்றக் கோரி வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

அடுத்த செய்தி