ஆப்நகரம்

சிபிஐ இயக்குநரின் அதிகாரப் பறிப்பு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

தன்னை கட்டாய விடுப்பில் அனுப்பியதற்கு எதிராக சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மா தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

TIMESOFINDIA.COM 6 Dec 2018, 5:02 pm
கடந்த அக்டோபர் 23ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் அலோக் வெர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா ஆகியோரின் அதிகாரங்களைப் பறித்து கட்டாய விடுப்பில் செல்ல வேண்டும் மத்திய அரசால் உத்தரவிட்டது. இடைக்கால சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவை நியமித்துள்ளது.
Samayam Tamil alok-varma-


மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து அலோக் வெர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஒரே நாளில் இரவோடு இரவாக சிபிஐ அதிகாரிகளிடையே மோதல் ஏற்படவில்லை. தேர்வுக்குழுவை ஆலோசிக்காமல் அவர்களது அதிகாரங்களைப் பறிப்பதற்கு என்ன அவசியம் வந்தது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், அரசின் நடவடிக்கை நேர்மையாகவும் சிபிஐ நிர்வாகத்தின் நலனை முன்னிட்டும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்த செய்தி