ஆப்நகரம்

முத்தலாக் விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

முஸ்லிம் மதத்தில் பெண்களுக்கு விவாகரத்து அளிக்கும் முத்தலாக் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

TNN 22 Aug 2017, 10:32 am
முஸ்லிம் மதத்தில் பெண்களுக்கு விவாகரத்து அளிக்கும் முத்தலாக் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
Samayam Tamil supreme court ruling on triple talaq validity today
முத்தலாக் விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு


இஸ்லாமிய ஷரீத் சட்டப்படி, இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆண் தனது மனைவியை விவாகரத்து செய்ய மூன்று முறை 'தலாக்' கூறும் 'முத்தலாக்' முறையால் அந்த மதத்தைச் சேர்ந்த பெண்கள் அதிகமாக பாதித்து வருவதாக செய்தி வெளியாகி வருகிறது. இந்த நடைமுறையால் பாதிப்படைந்த இஸ்லாமியப் பெண்கள் இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில், முத்தலாக் தொடர்பான விவாதங்களும் கருத்துக்களும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தில் அனைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இயங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மேலும் இதற்கு எதிராக பேசுவது இஸ்லாமிய மதத்திற்கு எதிராக செயல்படுவது என்ற கருத்தும் நிலவி வந்தது. ஆனால் இந்த முறையால் அதிகமாக பெண்கள் பாதிக்கப்பட்டதால், இஸ்லாமிய பெண்கள் இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.இந்த நிலையில் விசாரணை முடிவடைந்து , இன்று அதற்கான தீர்ப்பு வழங்கப்படுகிறது. இஸ்லாமிய தனிநபர் சட்டத்தில், நீதிமன்றம் தலையிட்டு திருத்தம் செய்ய முடியுமா என்பது குறித்து நீதிபதிகள் இன்று அறிவிக்க உள்ளனர்.

Supreme Court ruling on triple talaq validity today

அடுத்த செய்தி