ஆப்நகரம்

கிறிஸ்துவர்கள் ஆதார் அட்டை வைத்திருப்பது பாவமா?

கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றுபவர்கள் ஆதார் அட்டைப் பெறுவது மதக் கொள்கைகளுக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 21 Mar 2018, 4:01 am
கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றுபவர்கள் ஆதார் அட்டைப் பெறுவது மதக் கொள்கைகளுக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil 658521-final-aadhaar


ஐசக் ஜான் என்ற மாணவர் ஒரு மேல்நிலைப் பள்ளியில் சேர்வதற்கு விண்ணப்பித்த போது ஆதார் எண் இல்லாததால் அவருக்கு சேர்க்கை மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “ஒரு எண்ணை அடையாளமாகப் பெறுவது நாங்கள் பின்பற்றும் கிறிஸ்துவ மதத்திற்கு எதிரானது” என்று கூறி ஆதார் அட்டை பெறுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, ஆதார் வழக்கு முழுக்க முழுக்க சட்டப்பூர்வமானது என்றும் இதற்கா மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

ஆதார் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருவது நினைவுகூரத்தக்கது.

அடுத்த செய்தி