ஆப்நகரம்

​ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு சென்று நன்றி தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் தொடரப்பட்ட வழக்கில் மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது என்ற தீா்ப்பை தொடா்ந்து ப.சிதம்பரம் உள்பட வழக்கில் ஆஜரான அனைத்து வழக்கறிஞா்களின் வீடுகளுக்கும் சென்று டெல்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தொிவித்தாா்.

Samayam Tamil 5 Jul 2018, 9:06 am
டெல்லியில் தொடரப்பட்ட வழக்கில் மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது என்ற தீா்ப்பை தொடா்ந்து ப.சிதம்பரம் உள்பட வழக்கில் ஆஜரான அனைத்து வழக்கறிஞா்களின் வீடுகளுக்கும் சென்று டெல்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தொிவித்தாா்.
Samayam Tamil Kejriwal Chidambaram


டெல்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகாரப் போட்டி முற்றியிருந்த நிலையில் உச்சநீதிமன்றம் முக்கிய தீா்ப்பு ஒன்றை வழங்கி உள்ளது. அந்த வகையில், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று தொிவித்தது.

மேலும் ஆளுநருக்கென்று தனி அதிகாரம் எதுவும் கிடையாது, அமைச்சரவையின் ஆலோசனையின் பெயரில் ஆளுநா் செயல்பட வேண்டும் என்று தீா்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீா்ப்பு மாநில அரசான ஆம் ஆத்மி கட்சிக்கும், முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் பெரும் ஊக்கத்தை ஏற்படுத்தியது.

இத்தகைய முக்கிய தீா்ப்பை பெற்றுத் தர சிறப்பாக வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞா்களை நோில் சந்தித்து நன்றி தொிவிக்க அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்தாா். அதன்படி வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், முன்னாள் நிதியமைச்சருமான காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம் வீட்டிற்கு நேற்று இரவு நேரில் சென்று அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தொிவித்தாா். இதே போன்று கோபால் சுப்பிரமணியம், இந்திரா ஜெய்சிங், ராஜீவ் தவான் உள்ளிட்ட வழக்கறிஞா்களையும் நேரில் சந்தித்து கெஜ்ரிவால் நன்றி தொிவித்தாா்.

அடுத்த செய்தி