ஆப்நகரம்

அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு...நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!!

நாடே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை (சனிக்கிழமை) காலை தீர்ப்பு வழங்க உள்ளது.

Samayam Tamil 8 Nov 2019, 9:44 pm
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம், ராமர் பிறந்த இடம் என ஹிந்து அமைப்புகள் குரல் எழுப்பின. இதைத்தொடர்ந்து, கடந்த 1992 -ஆம் ஆண்டு டிசம்பர் 6 -ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
Samayam Tamil acsc


இதையடுத்து, பாபர் மசூதி இருந்த இடத்தில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பதில் ஹிந்து அமைப்புகளுக்கும். முஸ்லிம் அமைப்புகளுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு போனது. நிர்மோகி அகோரா, ராம் லல்லா ஆகிய ஹிந்து அமைப்புகளும், சன்னி வஃக்பு வாரியமும் தொடர்ந்த இவ்வழக்கில், உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

கேரளாவில் 20 லட்சம் குடும்பங்களுக்கு இலவச இண்டர்நெட் வசதி: பினராய் விஜயன் அறிவிப்பு

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இவ்வழக்கின் விசாரணை சில மாதங்களுக்கு முன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

ஆறு பேர் கொண்ட இந்த அமர்வு இவ்வழக்கை 40 நாள்கள் தொடர்ந்து விசாரித்து வந்தது. இறுதிக்கட்ட விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், வரும் 13 -ஆம் தேதிக்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், நாடே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்க உள்ளது.

இதையடுத்து டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி