ஆப்நகரம்

தங்க சீர்வரிசை உடன் 1,300 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த தொழிலதிபரின் சோகப் பின்னணி!

சூரத்: ஏராளமான ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்து, தனது சோகப் பின்னணியை தொழிலதிபர் பகிர்ந்துள்ளார்.

Samayam Tamil 25 Dec 2018, 7:27 pm
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மஹேஷ் சவானி. இவர் பிபி சவானி குழுமத்தின் தலைவராக இருக்கிறார். இந்நிறுவனம் சார்பில் 261 தந்தையில்லா பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
Samayam Tamil Surat Wedding


இதற்காக சூரத்தில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டது. அங்கு தங்க நகைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் சீதனமாக வழங்கி, அனைவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

அப்போது ஒரு தந்தையாக இருந்து அனைத்து சடங்குகளையும் செய்து வைத்தார். கடந்த 2012ஆம் ஆண்டு முதல் தந்தையில்லா ஏழைப் பெண்களுக்கு மஹேஷ் சவானி திருமணம் செய்து வைத்து வருகிறார்.

இதுவரை 1,300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு மஹேஷ்க்கு திருமணம் நடைபெற்றது. ஆனால் அதற்கு முன்பே அவரின் தந்தை உயிரிழந்துள்ளார்.

இதனால் தந்தையின்றி தான் திருமணம் நடைபெற்றது. இதனால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார். அப்போது முதல் தந்தையில்லா பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க தொடங்கினார்.

நேற்றைய விழாவின் போது பெண் ஒருவரின் தன்னை அறியாமல் கண்ணீர் சிந்தினார். அதைக் கண்டு மஹேஷ் தந்தையாக கண்ணீரைத் துடைத்தார். இந்தக் காட்சிகள் நெஞ்சை உருகும் விதமாக அமைந்தன.

அடுத்த செய்தி