ஆப்நகரம்

சாதாரண மக்களின் சேமிப்புகள் மீதான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்: கெஜ்ரிவால் சாடல்

கருப்புப் பணத்தின் மீதல்ல, சாதாரண மக்களுடைய ஆண்டுக்கணக்கிலான சேமிப்புகள் மீதான சர்ஜிக்கல் ஸ்டிரைக் என தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக சாடியுள்ளார்.

TNN 12 Nov 2016, 1:01 pm
புதுதில்லி: கருப்புப் பணத்தின் மீதல்ல, சாதாரண மக்களுடைய ஆண்டுக்கணக்கிலான சேமிப்புகள் மீதான சர்ஜிக்கல் ஸ்டிரைக் என தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக சாடியுள்ளார்.
Samayam Tamil surgical strike is not on black money it is on the savings of the common man kejriwal
சாதாரண மக்களின் சேமிப்புகள் மீதான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்: கெஜ்ரிவால் சாடல்


கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு திடீரென அதிரடியாக அறிவித்தது. மாற்று வழிகளை அரசு அறிவித்திருந்தாலும், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை சிலர் பாராட்டினாலும், சிலர் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். பிரதமரின் இந்த நடவடிக்கையை, அண்மையில் பாகிஸ்தான் மீது தொடுக்கப்பட்ட துல்லிய தாக்குதலுடன் #SurgicalStrike ஒப்பிட்டு, கருப்புப் பணத்தின் மீதான சர்ஜிகல் ஸ்டிரைக் என பாஜக உள்ளிட்ட கட்சிகள் புகழாரம் சூடி வருகின்றன.

இந்நிலையில், பிரதமரின் இந்த நடவடிக்கை கருப்புப் பணத்தின் மீதல்ல, சாதாரண மக்களுடைய ஆண்டுக் கணக்கிலான சேமிப்புகள் மீதான சர்ஜிக்கல் ஸ்டிரைக் என தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவிப்பதற்கு முன்னரே, பிரதமர் தன்னுடையே நண்பர்களுக்கும், நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருப்பவர்களுக்கு இதுகுறித்து எச்சரித்து விட்டார். கருப்புப் பணதிற்கு எதிரான சண்டை #FightForCorruption என்ற பெயரின் மூலம் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. அரசின் உள்நோக்கம் தவறாக உள்ளது. கருப்புப் பணத்தின் மீதல்ல, சாதாரண மக்களுடைய ஆண்டுக் கணக்கிலான சேமிப்புகள் மீதான சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்று கூறியுள்ளார்.

மேலும், கடந்த காலாண்டில் வங்கிகளில் மிகப்பெரிய தொகைகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று கூறிய கெஜ்ரிவால், அவர்கள் அனைவருக்கும் இந்த நடவடிக்கை குறித்து அரசு முன்னரே எச்சரித்து விட்டது என்றும் குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி