ஆப்நகரம்

பயங்கரவாத்துக்கு எதிரான தாக்குதலால் பாஜகவுக்கு 22 சீட் கிடைத்து விடும்: எடியூரப்பா சர்ச்சை பேச்சு

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலால், பாஜகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளதாக கர்நாடக முன்னாள் அமைச்சர் எடியரப்பா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 28 Feb 2019, 11:32 am
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலால், பாஜகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளதாக கர்நாடக முன்னாள் அமைச்சர் எடியரப்பா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil yeddyurappa


காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை, இந்திய விமானப்படை எல்லை கடந்து தாக்கியது. இதனால், இருநாட்டு எல்லையிலும் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தானின் பிடியில் உள்ளார்.

இந்த நிலையில், பயங்கரவாத தாக்குதலால் நாடாளுமன்ற தேர்தலில் எங்களுக்கு (பாஜக) 22 இடங்களில் சீட் கிடைக்கும் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த எடியூரப்பா பேசியதாதவது: ‘இந்திய விமானப்படை எல்லை கடந்து பயங்கரவாத முகாம்களை வேரோடு தகர்த்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால், நாளுக்கு நாள் பாஜகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. பிரதமர் மோடி எடுத்துள்ள இந்த நடவடிக்க வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 இடங்களில் பாஜகவுக்கு 22 இடங்கள் கிடைக்கும். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவே வெற்றி பெறும். மோடியே மீண்டும் பிரதமராக வருவார்.’

இவ்வாறு எடியூரப்பா பேசியுள்ளார்.

அடுத்த செய்தி