ஆப்நகரம்

இந்தியாவின் தூய்மையான நகரம்: தொடர்ந்து 6வது ஆண்டாக இந்தூர் முதலிடம்!

தூய்மையான நகரமாக, மத்திய பிரதேசத்தின் இந்தூர் தொடர்ந்து ஆறாவது முறையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது

Samayam Tamil 1 Oct 2022, 7:00 pm

ஹைலைட்ஸ்:

  • இந்தியாவின் தூய்மையான நகரம்
  • தொடர்ந்து 6வது ஆண்டாக இந்தூர் முதலிடம்!
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil SWACHH SURVEKSHAN AWARDS
இந்தியாவில், தூய்மையான நகரமாக, மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் தொடர்ந்து ஆறாவது முறையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

தூய்மையில் சிறப்பாக செயல்படும் நகரங்களை கண்டறிந்து கவுரவப்படுத்தி ஊக்குவிக்கும் வகையில், ஸ்வஸ் சர்வேக்‌ஷான் என்ற தூய்மையான நகரங்களுக்கான விருது வழங்கும் திட்டத்தை 2016 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார்.
இதன்படி பல்வேறு பிரிவுகளின் கீழ் நாட்டில் தூய்மையில் சிறந்து விளங்கும் நகரங்கள் குறித்த தரவரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஐந்து முறை தூய்மை நகரங்களில் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தூர், தொடர்ந்து ஆறாவது முறையாக முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.

முதல் இடம் பிடித்துள்ள இந்தூருக்கு வெற்றிக்கான விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மத்திய பிரதேச மாநில அரசு அதிகாரிகளிடம் வழங்கினார். இதற்கு அடுத்தபடியாக, குஜராத் மாநிலத்தின் சூரத் மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தின் நவி மும்பை நகரங்கள் உள்ளன. கடந்த ஆண்டு மூன்றாவது இடத்தில் ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா இருந்தது.
'மாநிலங்கள் காப்பாற்றப்பட வேண்டும்!' - சிபிஎம் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
மாநில வாரியான பட்டியலில், மத்திய பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதற்கடுத்து சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் உள்ளன. ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் வசிக்கும் நகரங்கள் அடிப்படையிலான தூய்மைப் பட்டியலில் உத்தர பிரதேச மாநிலத்தி ஹரித்துவார் நகரம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்து வாரணாசி மற்றும் ரிஷிகேஷ் நகரங்கள் உள்ளன.

100க்கும் குறைவான உள்ளாட்சி அமைப்புகள் கொண்ட மாநிலங்களின் தூய்மைப் பட்டியலில் திரிபுரா முதலிடம் பிடித்தது. ஒரு லட்சத்துக்கும் குறைவான மக்கள் வசிக்கும் நகரங்களின் பட்டியலில் மகாராஷ்டிர மாநிலத்தின் பஞ்சங்கினி முதலிடத்தையும், சத்தீஷ்கர் மாநிலத்தின், பதன் இரண்டாவது இடத்தையும், மகாராஷ்டிர மாநிலத்தின் கர்ஹத் மூன்றாவது இடத்தையும் பிடித்தது. தூய்மையான கன்டோன்மென்ட் போர்டு பட்டியலில் மகாராஷ்டிர மாநிலத்தின் தியோலாலி இடம் பெற்றுள்ளது.

அடுத்த செய்தி