ஆப்நகரம்

சமரசம் செய்ய வந்த வட்டாச்சியர் குத்தி கொலை..! அதிகாரிகள் முன்னிலையில் நடந்த கொடூரம்...

கர்நாடகாவில் நில பிரச்சனையை தீர்த்து வைக்க சென்ற வட்டாச்சியர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 10 Jul 2020, 6:58 pm
தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் தற்போது அரங்கேறி வரும் குற்ற சம்பவங்கள் மிகவும் பயங்கரமான வகையில் உள்ளன. கைது செய்ய வந்த போலீசாரை குருவியை சுடுவது போல சுட்டுக்கொன்றது, சிறுமிகள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படுவது என பல்வேறு குற்ற நிகழ்வுகள் இதில் அடங்கும்.
Samayam Tamil karnataka taluk officer murder


இந்நிலையில், கர்நாடக மாநிலம் பங்காருபேட்டையில் பஞ்சாயத்து செய்ய வந்த வட்டாட்சியர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியின் உச்சமாக உள்ளது. தொட்டக்களஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி . ஒய்வு பெற்ற ஆசிரியரான இவருக்கும், திப்பெனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பருக்கும் ஒரு வருடமாக நில பிரச்னை இருந்து வந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த பங்காருபேட்டை வட்டாச்சியர் சந்திரமெளலேஸ்வரா, வருவாய் அதிகாரிகளுடன் தொட்டக்களஞ்சி கிராமத்துக்கு சென்றனர். அப்போது, இரு தரப்பினரின் முன்னிலையில் நிலம் அளக்கப்பட்டது. அப்போது, கூடுதலாக இரண்டு அடி நிலம் ராமமூர்த்திக்கு சென்றதால், வெங்கடாசலபதி வட்டாட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கிருஷ்ணகிரியில் 6 மாத பெண் குழந்தை தண்ணீர் டிரம்மில் சடலமாக மீட்பு..!

ஆனால், நிலம் முறைப்படி அளக்கப்பட்டுள்ளது. ஆகையால், ஒத்துழைப்பு தரும்படி வெங்கடாசலபதியிடம் அதிகாரிகள் கேட்டுள்ளனர். அப்போது, ஆத்திரமடைந்த வெங்கடாசலபதி, வட்டாட்சியர் சந்திரமெள லேஸ்வராவை கத்தியால் குத்தினார்.

இதையடுத்து ரத்த வெள்ளத்தில் சரிந்த வட்டாச்சியர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அதனை தொடர்ந்து, வெங்கடாசலபதி பங்காருபேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி