ஆப்நகரம்

18 தொகுதிகளுக்கும் 6 மாதத்தில் தேர்தல்? ஓ.பி. ராவத் பேட்டி

தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் 6 மாதங்களில் இடைதேர்தல் நடத்தப்பட வேண்டும் என, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஒ.பி. ராவத் கூறியுள்ளார்.

Samayam Tamil 25 Oct 2018, 6:18 pm
தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் 6 மாதங்களில் இடைதேர்தல் நடத்தப்பட வேண்டும் என, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஒ.பி. ராவத் கூறியுள்ளார்.
Samayam Tamil 1200px-Shri_Om_Prakash_Rawat_(cropped)
தமிழக இடைத்தேர்தல் குறித்து ஓ.பி.ராவத் அதிரடி பேட்டி


18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கப்பட்டது செல்லும் என்றும், சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற 3வது நீதிபதி சத்தியநாராயணன் இன்று தீர்ப்பு அளித்தார்.

இதன் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் 18 தொகுதிகளும் வெற்றிடமாகியுள்ளன. மேலும் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளை சேர்த்து தமிழகத்தில் தற்போது 20 தொகுதிகள் இடைதேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் அதுகுறித்து விரைவில் முடிவுகள் எடுக்கப்பட்டு, தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று ஓ.பி. ராவத் கூறினார். இவரது இந்த கருத்தை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் இடைதேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

அடுத்த செய்தி