ஆப்நகரம்

தமிழா, பாரதமாதாவா? தமிழக எம்.பிக்களால் கலகலப்பாகிய மக்களவை

தமிழ் பற்று முக்கியமா அல்லது இந்திய பற்று முக்கியமாக என மக்களவையில் தமிழக எம்.பி.,க்கள் பதவி ஏற்பின்போது பெரும் வார்த்தை ஜாலங்கள் அரங்கேறியுள்ளது பலரை வியப்படையச் செய்துள்ளது. ஜோதிமணி, திருநாவுக்கரசு உள்ளிட்ட பல தமிழக எம்.பிக்கள் பதவி ஏற்ற பின்னர் தமிழ் வாழ்க, தமிழ் வாழ்க என கோஷம் எழுப்பினர்.

Samayam Tamil 18 Jun 2019, 12:40 pm
நாடாளுமன்றத்தின் மக்களவையில் பதவிப் பிரமாணம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் தமிழில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
Samayam Tamil parliment


பஞ்சாப் சங்ரூர் தொகுதி ஆம் ஆத்மி எம்.பி., பகவந்த் மன் மக்களவையில் பதவியேற்றபின் “இன்குலாப் ஜிந்தாபாத்” என்று முழக்கம் இட்டார். இது மக்களவையில் பலரது கைத்தட்டலைப் பெற்றது.

மக்களவையில் திருவள்ளூர் தொகுதி காங்., எம்.பி. ஜெயக்குமார் தமிழில் பதவியேற்றுக்கொண்டார். காந்தி, அம்பேத்கர், பெரியார், காமராஜர் வாழ்க என்று குறிப்பிட்டு ஜெயக்குமார் பதவியேற்றுக் கொண்டார். தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.பி.க்கள் பதவியேற்றார்.

வடசென்னை எம்.பி., கலாநிதி வீராசாமி, தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன், ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் எம்.பி., செல்வம், அரக்கோணம் தொகுதி எம்.பி. ஜெகத்ரட்சகன், கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. டாக்டர் செல்லக்குமார்,
தருமபுரி தொகுதி எம்.பி. செந்தில்குமார், திருவண்ணாமலை தொகுதி எம்.பி. சி.என்.அண்ணாதுரை, ஆரணி தொகுதி எம்.பி., விஷ்ணுபிரசாத், விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி. கவுதம சிகாமணி.

ஜோதிமணி, திருநாவுக்கரசு உள்ளிட்ட பல தமிழக எம்.பிக்கள் பதவி ஏற்ற பின்னர் தமிழ் வாழ்க, தமிழ் வாழ்க என கோஷம் எழுப்பினர்.

இதற்கு பதிலடியாக பாரதிய ஜனதா எம்.பி.,க்கள் பலர் பாரத் மாதா கீ ஜே கோஷம் எழுப்பினர்.

பாரிவேந்தர் இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று தமிழ் வாழ்க, இந்தியாவும் வாழ்க என சொல்லி கிண்டலாக சிரித்து விட்டுச் சென்றார். அதனால் சிரிப்பொலி எழுந்தது.

தமிழ் பற்று முக்கியமா அல்லது இந்திய பற்று முக்கியமாக என தமிழக எம்.பி.,க்கள் பதவி ஏற்பின்போது பெரும் வார்த்தை ஜாலங்கள் அரங்கேறியுள்ளது பலரை வியப்படையச் செய்துள்ளது.

தமிழக எம்.பி.,களின் பெயரை உச்சரிக்க முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார் வட இந்திய பெண் அறிவிப்பாளர். திருநாவுக்கரசு பெயரை அவர் உச்சரித்த விதத்தைக் கண்டு அனைவரும் சிரித்தனர்.

பலத்த எதிர்பார்ப்புடன் திருமா வளவன் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்ற பின் வாழ்க அம்பேத்கர், பெரியார் என்று சுருக்கமாக முடித்துவிட்டார்.

அடுத்த செய்தி