ஆப்நகரம்

’தமிழ்நாட்டுக்குத் திரும்பிப் போ!’; தமிழருக்கு நேர்ந்த அவமானம்

ஆப்ரஹாம் சாமுவேல் என்ற பொறியியலில் பிஹெச்டி பட்டம் பெற்ற 27 வயது தமிழ் மாணவருக்கு ஹிந்தி தெரியாத காரணத்தால் மும்பை விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்டது வைரலாகியுள்ளது.

Samayam Tamil 10 Jan 2019, 10:25 am
ஆப்ரஹாம் சாமுவேல் என்ற பொறியியலில் பிஹெச்டி பட்டம் பெற்ற 27 வயது தமிழ் மாணவர் அமெரிக்காவில் இருந்து மும்பை விமான நிலையம் வந்து இறங்கினார். அவருக்கு தமிழ், ஆங்கிலம் மட்டுமே தெரியும். ஹிந்தி தெரியாது.
Samayam Tamil abraham


விமான நிலைய அதிகாரிகள் அவரை ஹிந்தியில் பேச சொல்லி வற்புறுத்தியதாக அவர் குற்றச்சாடை முன்வைத்துள்ளார். தான் ஹிந்தி பேசாத காரணத்தால் தனக்கு கிளியரன்ஸ் கொடுக்க மறுத்தனர் என்றுள்ளார் அவர்.

மேலும் அவர்கள் ஆங்கிலத்தில் பேச விரும்பவில்லை. தான் ஒரு தமிழன், தனக்கு ஹிந்தி தெரியாது என்றபோது, தமிழ் கவுண்டரிக்குச் செல்லவேண்டியதுதானே? இங்கு ஏன் வந்தீர் என அவர்கள் கிண்டலாகக் கூறியதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஆப்ரஹாம். இந்த டிவீட்டில் மோடி, ராகுல் ஆகியோரை டாக் செய்துள்ளார்.

ஆப்ரஹாமின் டுவீட்டில், ’தமிழர்களும் இந்தியர்கள்தான். இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு மாநிலத்தவருக்கு அவர்களது அழகான மொழி உள்ளது’ எனக் கூறியுள்ளார்.

ஆப்ரஹாமின் இந்த டுவீட் வைரலாகி அதிகமாக பகிரப்பட்டது. இதனால் உயர் அதிகாரிகள் கவனத்துக்கு இவ்விஷயம் சென்றது. விமான நிலைய உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இமிக்கிரேஷனில் பணிபுரிபவர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்கின்றனர். இது அவர்களுக்கு மனஅழுத்ததைத் தருகிறது.

எனவே இவ்வாறு பேச வாய்ப்புள்ளது. அதற்காகவே அவர்களுக்கு மன அழுத்தத்தில் இருந்து விடுபட பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள்மீது கட்டாயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அடுத்த செய்தி