ஆப்நகரம்

ராகுல் காந்தி வீட்டு முன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர் போராட்டம்

முன்னதாக பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு ராகுல் காந்தி முடிவு எடுத்து இருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பதவி விலகும் முடிவை கைவிடவும், தலைவராக தொடரவும் வலியுறுத்தி அவரது வீட்டு முன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

Samayam Tamil 3 Jun 2019, 11:56 am
முன்னதாக பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு ராகுல் காந்தி முடிவு எடுத்து இருந்தார். அவரது முடிவை காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி ஏற்க மறுத்துவிட்டது. எனினும் ராகுல்காந்தி தனது முடிவில் பிடிவாதமாக இருக்கிறார்.
Samayam Tamil rahul gandhi


இந்தநிலையில் ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்யக்கூடாது. தொடர்ந்து அவர் அப்பதவியில் நீடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை தேனாம்பேட்டை ஏ.ஜி.-டி.எம்.எஸ். மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து காமராஜர் அரங்கம் வரையில் முன்னதாக பேரணி நடைபெற்றது.

அப்போது வடசென்னை மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராஜன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பேரணி முடிவில் காமராஜர் அரங்க வளாகத்தில் கே.எஸ்.அழகிரி தலைமையில் சிறப்பு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர்கள் சஞ்சய் தத், சிரிவல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பதவி விலகும் முடிவை கைவிடவும், தலைவராக தொடரவும் வலியுறுத்தி அவரது வீட்டு முன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

தேர்தல் தோல்விக்கு பொறுபேற்று ராகுல்காந்தி தலைவர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்த நிலையில், காங்கிரஸ் கட்சிக் கூட்டதில் அவரது முடிவு ஒரு மனதாக நிராகரிக்கப்பட்டது.

எனினும் அவர் தனது முடிவில் பிடிவாதமாக உள்ள நிலையில் கட்சியின் பல்வேறு தரப்பினரும் அவர் தலைவராகத் தொடர கோரிக்கை விடுத்து வருகின்றனர். இன்று டெல்லியில் உள்ள அவரது வீட்டின் முன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடுத்த செய்தி