ஆப்நகரம்

கேரள பாதிப்பிற்கு உதவிக்கரம்; கொட்டும் மழையில் களப்பணி ஆற்றிய தமிழக ஐஏஎஸ் அதிகாரி!

கேரள மழை, வெள்ள பாதிப்புகளுக்கு தமிழக ஐஏஎஸ் அதிகாரி உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

Samayam Tamil 16 Aug 2018, 12:56 pm
சென்னை: கேரள மழை, வெள்ள பாதிப்புகளுக்கு தமிழக ஐஏஎஸ் அதிகாரி உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
Samayam Tamil Raja1


கேரளாவில் கனமழை, வெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் வீடுகள், உணவு, உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவ ஏராளமான மக்கள் முன்வந்துள்ளனர். இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜமாணிக்கம் களத்தில் இறங்கி உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

மதுரை மாவட்டம் திருவாதவூர் கிராமத்தைச் சேர்ந்த எம்.ஜி.ராஜமாணிக்கம். ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், திருச்சி மாவட்டம் வேலைவாய்ப்புத் துறை, உணவு பாதுகாப்புத் துறை ஆணையராக பணியாற்றிவர். திருவாதவூர் அரசுப் பள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்புகள், போட்டித் தேர்வுகளில் கிராம இளைஞர்களை பங்கேற்கச் செய்யும் வகையில் இலவச பயிற்சி மையம் ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

தற்போது கேரள மாநிலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நிஷாந்தினி கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இருவரும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, தமிழக அரசுப் பள்ளிகளில் படித்து முன்னேற்றம் அடைந்தவர்கள்.

தாங்கள் பணியாற்றும் பகுதிகளீல் இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளம் மீட்புப் பணிகளுக்காக ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கம், வயநாடு உதவி ஆட்சியர் என்.எஸ்.கே உமேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்த சூழலில் நள்ளிரவில் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நிவாரணப் பொருட்கள் வந்தன. அவற்றை இறக்கி ஆட்கள் இல்லை. அப்போது களத்தில் இறங்கிய ராஜமாணிக்கம், தானே மூட்டைகளை தோளில் சுமந்து கொண்டு அறையில் இறக்கி வைத்தார். இந்த செயலை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Tamilnadu IAS Rajamanickam helps for Kerala Floods.

அடுத்த செய்தி