ஆப்நகரம்

காசநோயாளிகளுக்கு நிதி உதவி வழங்கவும் ஆதார் எண் கட்டாயம்

காசநோயாளிகள் மற்றும் மருத்துவமனைகள் நிதி உதவி பெற ஆதார் எண் கட்டாயம் என்று, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

TNN 21 Jun 2017, 9:52 pm
காசநோயாளிகள் மற்றும் மருத்துவமனைகள் நிதி உதவி பெற ஆதார் எண் கட்டாயம் என்று, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
Samayam Tamil tb patients too need aadhar for cash benefits
காசநோயாளிகளுக்கு நிதி உதவி வழங்கவும் ஆதார் எண் கட்டாயம்


தேசிய காசநோயாளிகள் தடுப்புத் திட்டத்தின்கீழ் மத்திய அரசு, நாடு முழுவதும் உள்ள காசநோயாளிகள், காசநோய் மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றுக்கு மருத்துவச் செலவுகளுக்கு, நிதி உதவி வழங்கிவருகிறது.

இந்நிலையில், இந்த சலுகையின்கீழ் தொடர்ந்து நிதி உதவி பெற விரும்பினால், ஆதார் எண்ணை, பயனாளிகள் சமர்ப்பிக்க வேண்டும் என்று, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அதிரடியாகக் கூறியுள்ளது. இதுபற்றி சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணையதளத்திலும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், இதுபற்றி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், அதிகளவில் நிதி உதவி பெறும் பயனாளிகளுக்கு மட்டுமே இந்த விதிமுறை பொருந்தும் எனக் குறிப்பிட்டனர். அதேசமயம், மற்ற பயனாளிகளை பற்றி அவர்கள் கருத்து கூற மறுத்துவிட்டனர். இதனால், காசநோயாளிகளுக்கு, மருத்துவச் செலவுகளுக்கு நிதி உதவி கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

TB patients will need Aadhar for cash benefits, according to health ministry database.

அடுத்த செய்தி