ஆப்நகரம்

டீ விற்றவர் ஆளும் நாட்டில் டீ விற்பவர் மகனுக்கு நேர்ந்த கொடூரம்

தேநீர் விற்பவரின் மகன் என்பதால் மாணவர் ஒருவரை பள்ளியில் இருந்து நீக்கியுள்ள அதிர்சிகரமான சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

TNN 7 May 2016, 8:46 pm
லக்னோ: தேநீர் விற்பவரின் மகன் என்பதால் மாணவர் ஒருவரை பள்ளியில் இருந்து நீக்கியுள்ள அதிர்சிகரமான சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil tea vendor son sacked from school in up
டீ விற்றவர் ஆளும் நாட்டில் டீ விற்பவர் மகனுக்கு நேர்ந்த கொடூரம்


உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் உள்ள லார்டு மகாவீர் அகாடமி எனும் ஆங்கில வழிக்கல்வி பள்ளி. இந்த பள்ளியில் 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் அரிஹந்த் ஜெயின். இவரது தந்தை தேநீர் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் மாணவன் அரிஹந்த் ஜெயின், பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவரது தந்தை தேநீர் கடை நடத்தி வருவதால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இச் சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ள அம்மாவட்ட நீதிபதி, விசாரணைக் குழுவில் கூடுதல் மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட பள்ளி ஆய்வாளர் ஆகியோரையும் நியமித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் தவறு செய்தது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஆனால் பள்ளி நிர்வாகமோ, மாணவரின் பெற்றோர் மாற்று சான்றிதழ் (டி.சி) கேட்டனர். மாணவரை நாங்கள் பள்ளியில் இருந்து வெளியேற்றவில்லை என்று கூறியுள்ளது.

அடுத்த செய்தி