ஆப்நகரம்

சென்னை விமான நிலையத்தில் ஐடி ஊழியர் பலி!!

பெங்களூரில் பனியாற்றி வந்த ஆந்திராவைச் சேர்ந்த வாலிபர் இன்று காலை சென்னை விமான நிலைய மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 29 Jan 2018, 2:14 pm
பெங்களூரில் பனியாற்றி வந்த ஆந்திராவைச் சேர்ந்த வாலிபர் இன்று காலை சென்னை விமான நிலைய மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil techie dies after falling off chennai airport flyover
சென்னை விமான நிலையத்தில் ஐடி ஊழியர் பலி!!



சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் செல்லும் வழியில் இருக்கும் மேம்பாலத்தில் ஒரு இளைஞர் இன்று காலை அமர்ந்து இருந்தார். அப்போது அவர் திடீரென கீழே விழுந்து இறந்தார். இவர் விஜயவாடாவில் உயுரு என்ற இடத்தைச் சேர்ந்த சைதன்யா என்பது தெரிய வந்துள்ளது. பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.


இவர் கீழே விழுந்ததைப் பார்த்தவர்கள் கூறுகையில், ‘’மேம்பாலத்தில் அமர்ந்து இருந்தவர் திடீரென கீழே விழுந்தார்’’ என்று தெரிவித்துள்ளனர்.


அங்கு வைக்கப்பட்டு இருந்த சிசிடி கேமராவில் பார்த்தபோது, அந்த மேம்பாலத்தில் அமர்ந்து கொண்டு செல்பி எடுத்துக் கொண்டும், சிலரிடம் பேசிக் கொண்டு இருந்ததும் தெரிய வந்துள்ளது.


மேம்பாலத்தில் அமர்ந்து இருந்தவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறுதலாக கீழே விழுந்து இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது தலையில் பல இடங்களில் காயம் ஏற்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து மேலும் போலீசார் கூறுகையில், ‘’சைதன்யாவிடம் விமான டிக்கெட் இல்லை. பை எதுவும் இல்லை. அவரது செல்போனில் இ டிக்கெட் இருந்து இருக்கலாம். அவரது ஆப்பிள் ஐ போன் கீழே விழுந்ததில் சேதமடைந்துள்ளது. மற்றொரு போனும் 10 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் செயல்பாட்டை இழந்துள்ளது. அவரிடம் இருந்து அடையாள அட்டை கைப்பற்றப்பட்டது. அதில் இருந்த விலாசத்தின்படி, அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவரது தந்தை ஜனார்த்தன ராவ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சென்னை நோக்கி வந்து கொண்டுள்ளனர். எதற்காக அவர் சென்னை வந்தார் என்பது தெரியவில்லை’’ என்றனர்.


இயற்கைக்கு மாறான சாவு என்று விமான நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி