ஆப்நகரம்

பிஹாரில் தேஜஸ்வி அலை; ஓடிப் போன மோடி அலை - காங்கிரஸ் உற்சாகம்!

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் காங்கிரஸ் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது.

Samayam Tamil 26 Oct 2020, 3:52 pm
பிஹார் மாநிலத்தின் 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. வரும் 28ஆம் தேதி ராகுல் காந்தி பிரச்சாரம் செய்ய வருகை புரிகிறார். இவர் இரண்டு கட்டங்களாக பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ’மகாகத் பந்தன்’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. இதன் முதல்வர் வேட்பாளராக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் நிறுத்தப்பட்டுள்ளார்.
Samayam Tamil Tejashwi Yadav


இந்நிலையில் பிரச்சாரம் ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் ராஜீவ் சுக்லா, என்னுடைய கணிப்பின் படி வரும் தேர்தலில் மகாகத் பந்தன் பெரும் புயலை ஏற்படுத்தப் போகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு மோடி அலை எப்படி தாக்கத்தை ஏற்படுத்தியதோ, அதேபோல் தற்போதைய தேர்தலில் தேஜஸ்வி யாதவ் அலை உருவாகியிருக்கிறது.

தேர்தல் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக வரும். பெரும்பான்மை பெற்று நிதிஷ் குமார் ஆட்சியை பிஹாரில் இருந்து அகற்றுவோம். பாஜகவின் போஸ்டர்களில் நிதிஷ் குமார் புறக்கணிக்கப் பட்டிருக்கிறார்.

பிஹாரில் யாருக்கு வெற்றி வாய்ப்பு? ஆச்சரியப்படுத்தும் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

அவரை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்று தெரிகிறது. ஆனால் நாங்கள் அப்படியில்லை. வரும் தேர்தலில் புதிய மாற்றத்தை பிஹார் மாநிலம் பார்க்கப் போகிறது. லோக் ஜன்சக்தி தலைவருக்கு பாஜகவில் இருந்து ஆதரவு கரம் நீள்கிறது.

கூட்டணியில் இருந்து விலகினாலும் அவருக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் நிதிஷ் குமாரின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

அடுத்த செய்தி