ஆப்நகரம்

தெலுங்கானாவில் வாரிசு அரசியல்: மகனுக்கு கட்சி செயல் தலைவர் பதவி!

தெலுங்கானா மாநில முதல்வரும், ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகரராவ் தேசிய அளவில் கவனம் செலுத்த ஈர்ப்பதால் கட்சி பொறுப்பை தனது மகனிடம் ஒப்படைத்துள்ளார்.

Samayam Tamil 15 Dec 2018, 11:24 am
தெலுங்கானா மாநில முதல்வரும், ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகரராவ் தேசிய அளவில் கவனம் செலுத்த ஈர்ப்பதால் கட்சி பொறுப்பை தனது மகனிடம் ஒப்படைத்துள்ளார்.
Samayam Tamil telangaa


மத்தியப்பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில், 119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் 88 இடங்களில் டிஆர்.எஸ் கட்சி வெற்றி பெற்றது. தொடர்ந்து 21 இடங்களை காங்கிரஸ் மற்றும் ஒரு இடத்தை பாஜகவும் கைப்பற்றியது. இந்த நிலையில், 88 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்ற டிஆர்.எஸ் கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் 2 ஆவது முறையாக முதல்வராக நேற்று பதவி ஏற்றார்.

இதைத் தொடர்ந்து அவரது மகனும், சிர்சிலா தொகுதி யின், டி.ஆர்.எஸ்., கட்சி, எம்.எல்.ஏ.,வுமான கே.டி.ராமாவிடம், கட்சி பொறுப்பை ஒப்படைப்பதாக, முதல்வர் சந்திரசேகர் அறிவித்தார். கட்சியின் செயல் தலைவராக ராமா நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய அரசியலில் தீவிரமாக ஈடுபட உள்ளதால் சந்திரசேகர், கட்சி பொறுப்பை மகனிடம் ஒப்படைத்துள்ளதாக கட்சியினர் கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி