ஆப்நகரம்

குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் மதிப்பில் சலுகைகள்; ஆச்சரியப்படுத்தும் தெலுங்கானா முதல்வர்!

ஒவ்வொரு குடும்பத்திற்கு லட்சக்கணக்கில் சலுகைகளை வாரி வழங்குவதாக தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 23 Jul 2019, 11:47 am
ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்த போது தெலுங்கானா மாநிலம் உதயமானது. அதன் முதலமைச்சராக தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் சந்திரசேகர ராவ் நீடித்து வருகிறார்.
Samayam Tamil KCR


இவர் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்து கொண்டிருக்கிறார். இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் தனது சொந்த ஊரான சிந்தமடகாவிற்கு சென்றிருந்தார்.

அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் சந்திரசேகர ராவ், சாதி, மத பேதம் இல்லாமல் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 லட்சம் மதிப்பிலான சலுகைகள் வழங்கப்படும்.

இதற்காக விரைவில் அரசாணை வெளியிடப்படும். இதன்மூலம் சுமார் 2,000 குடும்பங்கள் பயன்பெறுவர். ரூ.10 லட்சம் மூலம் சொந்தமாக கோழிப் பண்ணை, பால் பண்ணை அமைத்துக் கொள்ளலாம்.

கர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு – சபாநாயகர் கெடு!

வேளாண் தொழில், அறுவடை இயந்திரங்கள் கொள்முதல், சிறுதொழில், ஆட்டோ வாங்கி பயன்படுத்துதல் உள்ளிட்ட பலன்களை பெறலாம். சிந்தமடகாவின் மேம்பாட்டிற்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

உங்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்ய நான் மக்களவை உறுப்பினர் ஆகவில்லை- பிரக்ஞா சர்ச்சைப் பேச்சு!

சித்திபேட் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு கிராமத்திற்கும் ரூ.50 லட்சம் மேம்பாட்டு நிதி அளிக்கப்படும். சிந்தமடகாவை பொன் விளையும் பூமியாக மாற்றுவதே எனது விருப்பம் என்று தெரிவித்தார்.

எப்படிலாம் லீவு கேட்கிறாங்க பசங்க- அதுவும் மாவட்ட ஆட்சியர் கிட்டயே; தெறிக்கும் கமெண்ட்ஸ்!

அடுத்த செய்தி