ஆப்நகரம்

சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, உழைக்கும் மகளிருக்கு இன்று சிறப்பு விடுமுறை: மாநில அரசு!

உழைக்கும் மகளிருக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 8 Mar 2018, 8:02 am
ஐதராபாத்: உழைக்கும் மகளிருக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil telangana govt announces holiday for working womens for international womens day
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, உழைக்கும் மகளிருக்கு இன்று சிறப்பு விடுமுறை: மாநில அரசு!


உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. எட்டு மணி நேர வேலை, வேலைக்கு தகுந்த கூலி, அரசியலில் வாக்குரிமை போன்ற போராட்டங்களில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இதேபோல் பல்வேறு போராட்டங்களில் பெண்கள் களம் கண்டனர். இதன் விளைவாக கடந்த 1913ஆம் ஆண்டு, மார்ச் 8 முதல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் அரசு பணியாற்றும் அனைத்தும் மகளிருக்கும் சம்பளத்துடன் கூடிய ஒருநாள் சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Telangana government has declared a special casual leave to all women employees in the state on 8th March on the occasion of International Women’s Day.— ANI (@ANI) March 7, 2018 இதற்கான உத்தரவை முதலமைச்சர் சந்திர சேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு பிறப்பித்துள்ளது.

Telangana Govt announces holiday for working women's for International Women's Day.

அடுத்த செய்தி