ஆப்நகரம்

தெலங்கானா: வெள்ள நிவாரணம் கேட்கும் சந்திர சேகர்ராவ்

தெலங்கானா வெள்ளம் காரணமாக 1350 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசை சந்திர சேகர்ராவ் கேட்டுக்கோண்டுள்ளார்.

Samayam Tamil 16 Oct 2020, 6:25 am
கனமழை அதனால் உருவாகிய வெள்ளம் காரணமாக ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் பெரும் சேதத்தையும் உயிரிழப்பையும் சந்தித்து வருகின்றன.
Samayam Tamil flood


மழை, வெள்ளம், அதனால் ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக தெலங்கானாவில் மட்டும் 50 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா அரசு எடுத்துவரும் நடவடிக்கை காரணமாக அங்கு இயல்பு நிலை நேற்று முதல் திரும்பிவருகிறது.

மோடி, அமித் ஷா சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தெலுங்கானாவில் கொட்டித்தீர்த்த கனமழை, வெள்ளம் காரணமாக 5000 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்காக உடனடியாக ரூ 1,350 கோடி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் தெலுங்கானாவில் கடந்த இரு வாரங்களில் மட்டும் வழக்கத்தை விட 144 சதவீதமும், ஐதராபாத்தில் 404 சதவீதமும் மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

முத்தையா முரளிதரனுக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்தா? -சுப்ரமணியன் சுவாமி புது குண்டு!

மேற்கு மகாராஷ்டிராவின் சோலாப்பூர், சாங்லி மற்றும் புனே மாவட்டங்களில் மழை தொடர்பான சம்பவங்களில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். இந்த மூன்று மாவட்டங்களில் 20,000 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி