ஆப்நகரம்

சிக்கனிலிருந்து பரவுகிறதா கொரோனா?

சிக்கன் சாப்பிட்டு கொரோனா பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர் தெலங்கானா அமைச்சர்கள்.

Samayam Tamil 29 Feb 2020, 5:26 pm
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உலக நாடுகளே அச்சத்தில் உள்ளது. சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது அறுபது நாடுகளில் உள்ளது.
Samayam Tamil சிக்கனிலிருந்து பரவுகிறதா கொரோனா


இந்தியாவிலும் கொரோனா வைரஸ் காரணமாக கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சிலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த வைரஸ் எவ்வாறு பரவத் தொடங்கியது, அதற்கான மருந்துகள் ஆகியவை இன்னும் முறையாக கண்டறியப்படவில்லை. இந்நிலையில் கொரோனா வைரஸ் சிக்கனிலிருந்து பரவுகிறது என்ற வதந்தி தமிழ்நாடு, தெலங்கானாவில் வாட்ஸப் மூலம் வலம் வந்தது.

வதந்தி பரப்பியவர் கைது செய்யப்பட்டார். இருப்பினும் கோழிக்கறி சாப்பிட்டால் கொரோனா வரும் என்ற அச்சம் மக்களிடம் நிலவி வந்தது. இதனைத் தொடர்ந்து இறைச்சி வியாபாரத்தில் பெரும் தேக்கம் ஏற்பட்டது. ஏற்கெனவே கொரோனா தாக்கத்தால் சர்வதேச வணிகம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில் உள்ளூர் பிராய்லர் வியாபாரிகள் இந்த வதந்தியால் பாதிக்கப்பட்டனர்.

அறுபது நாடுகளை ஆட்கொண்ட கொரோனா!

இந்நிலையில் இத்தகைய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் தெலங்கானா மாநில அமைச்சர்கள் நூதன விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



ஹைதராபாத்தில் டாங்க் பந்த் என்ற இடத்தில் பிராய்லர் கோழி விற்பனை நிறுவனம் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அமைச்சர்கள் கே.டி.ராமா ராவ், தலசானி ஸ்ரீனிவாஸ், எடிலா ராஜேந்தர் ஆகியோர் மேடையில் வைத்து சிக்கன் சாப்பிட்டு மக்களின் அச்சத்தைப் போக்கியுள்ளனர்.

தற்போது கொரோனா வைரஸால் சீனா உட்பட உலகம் முழுவதும் 2924பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் இந்த வைரஸ் தொற்றால் 85 ஆயிரத்து 207 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி