ஆப்நகரம்

காதல் திருமணம் செய்த இளைஞர் கர்ப்பிணி மனைவி முன் படுகொலை!

தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் மாற்றுசாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்த இளைஞரை பெண்ணின் வீட்டார் கவுரவ கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 19 Sep 2018, 7:05 pm
தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் மாற்றுசாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்த இளைஞரை பெண்ணின் வீட்டார் கவுரவ கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil cats
காதல் திருமணம் செய்த இளைஞர் கர்ப்பிணி மனைவி முன் படுகொலை!


தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிர்யலாகுடா பகுதியை சேர்ந்த பெருமல்லா பிரனய்(25). இவரும் அதே அதே பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் மாருதிராவ் மகள் அம்ருதாவும் பள்ளியில் ஒன்றாக படிக்கும் போது நண்பர்களாக பழகி வந்தனர். பின்னர் இருவரும் பொறியியல் கல்லூரியில் ஒன்றாக சேர்ந்து படித்த போது இந்த பழக்கம் காதலாக மாறியது.

ஆனால் பிரனய் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர் என்பதால் இவர்கள் காதலுக்கு அம்ருதா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய அம்ருதாவும், அவரது காதலர் பிரனய் கடந்த ஜனவரி மாதம் ஹைதரபாத்தில் உள்ள ஆரிய சமாஜில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்தநிலையில் 3 மாத கர்ப்பிணியான அம்ருதாவை, மருத்துவ பரிசோதனைக்காக அங்குள்ள ஜோதி மருத்துவமனைக்கு பிரனய் நேற்று அழைத்து சென்றார். பரிசோதனை முடிந்து அவர்கள் வெளியே வந்தபோது பிரனய்யை தொடர்ந்த மர்ம நபர் ஒருவர் அரிவாளால் பயங்கரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

தன் கண்முன்னே கணவர் தாக்கப்படுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அம்ருதா, காப்பாற்றுமாறு உதவிக்கேட்டு மருத்துவமனைக்குள் ஓடினார். இந்நிலையில் பிரனய்யை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அங்குள்ள சிசிடிவி காமிராவில் பதிவான இந்த காட்சிகள் தற்போது வெளியாகி பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து நல்கோண்டா எஸ்.பி ரங்கநாத் கூறுகையில், கொலைவழக்கில் சந்தேகிக்கப்படும் அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் மற்றும் சகோதரன் ஷ்ரவன் ஆகியோரை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகிறோம் என்று கூறினார்.

அடுத்த செய்தி