ஆப்நகரம்

ஜூன் 1ம் தேதிக்கு பிறகு கோயில்கள், சர்ச்சுகள், மசூதிகள் திறக்க முடிவு?

ஜூன் 1ம் தேதிக்கு பிறகு வழிபாட்டு தளங்களை திறக்கவுள்ளதாக கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 27 May 2020, 4:00 pm
கொரோனா பொதுமுடக்கத்தை நான்காவது முறையாக மத்திய அரசு நீட்டித்துள்ளது. எனினும், மாநில அரசுகள் தங்களது விருப்பத்திற்கேற்ப கடைகள், போக்குவரத்து, தொழில் நிறுவனங்களை தொடங்கலாம் என தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மூன்றாவது பொதுமுடக்கம் வரை தடையில் இருந்த மதுக்கடைகள், சலூன் கடைகள், ஆட்டோ சேவைகள் போன்றவற்றை சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் மீண்டும் செயல்படலாம் என அறிவித்துள்ளது.
Samayam Tamil வழிபாட்டு தளங்களை திறக்கவுள்ளதாக கர்நாடகா அரசு முடிவு


எனினும், வழிபாட்டு தளங்கள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. அதேபோல அரசு பேருந்துகளும் இயக்கப்படாமல் உள்ளன. மதுக்கடைகளை திறக்கும் அரசு ஏன் வழிபாட்டு தளங்களை திறக்க மாறுகிறது என பல்வேறு இடங்களில் விஷ்வ ஹிந்து பரிஷித் அமைப்பினர் உட்பட பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜூன் 1ம் தேதி முதல் கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களை பக்தர்களுக்காக திறக்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கான அனுமதியை மத்திய அரசிடம் பெற காத்திருப்பதாகவும், ஹோட்டல்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என முதல்வர் எடியூரப்பா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொளுத்தி போட்ட ராகுல்; சிதறுமா MVA கூட்டணி - சூடுபிடிக்கும் மகாராஷ்டிர அரசியல்!

அதுகுறித்து கர்நாடகா முதல்வர் எடியூரப்பா செய்தியாளர்களுக்கு கூறியதாவது, '' கோயில்கள் திறக்கப்படும்போது கட்டாயம் மசூதிகளும், தேவாலயங்களும் திறக்கப்பட வேண்டும். அதில் எந்த தடையும் இருக்காது. நம் நாட்டில் சட்டம் ஒவ்வொருவருக்கும் ஒன்றுதான். ஆனால் அதற்கு மத்திய அரசின் அனுமதி தேவை. நாங்கள் அதற்காக காத்திருக்கிறோம். அதற்கான முயற்சிகளை தீவிரமாக எடுத்து வருகிறோம் '' என கூறினார்.

நான்காவது பொதுமுடக்கம் வரும் ஜூன் 1ம் தேதியோடு முடிவடையவுள்ள நிலையில், மத்திய அரசு பல தளர்வுகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம். அதில் வழிபாட்டு தளங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்த செய்தி