ஆப்நகரம்

Jammu Kashmir: அதிர்ச்சி செய்தி; பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் - உஷார் நிலையில் காஷ்மீர்!

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தகவல் கிடைத்துள்ளதால், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

Samayam Tamil 16 Aug 2019, 3:35 pm
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதையொட்டி பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Samayam Tamil JK Sec


இதுகுறித்து மத்திய அரசு கூறுகையில், பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தடை உத்தரவு தளர்த்தப்படும் என்று தெரிவித்தது.

Also Read: தெலுங்கானாவில் அத்தியாயத்தை துவக்கும் அமித் ஷா... வெற்றி பெறுவாரா?

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் தலைமை செயலாளர் சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில், எல்லை தாண்டிய பயங்கரவாத்தை தடுக்கும் வகையில் சில பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அதிகளவில் கூட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read: தீவிர சிகிச்சை பிரிவில் அருண் ஜெட்லி; நலம் விசாரிக்க விரையும் குடியரசுத் தலைவர்!

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். பதற்றமான சூழல் தணிந்த பிறகு, பள்ளி, கல்லூரிகள் படிப்படியாக திறக்கப்படும்.

பொது போக்குவரத்து எந்தவித தடையுமின்றி செயல்படும். அரசு அலுவலகங்கள் இன்று முதல் செயல்படுகிறது. தகவல் தொடர்பு வசதிகள் படிப்படியாக செயல்பாட்டுக்கு வரும். 22ல் 12 மாவட்டங்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.

Also Read: அரை மணி நேரம் படிச்சும் ஒன்னும் புரியல- காஷ்மீர் வழக்கில் தலையில் கொட்டிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!

5 மாவட்டங்களில் குறிப்பிட்ட தடை உத்தரவுகள் மட்டும் அமலில் உள்ளன. இனி எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படக் கூடாது என்று மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறோம். முடிந்தவரை விரைவாக இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

அடுத்த செய்தி