ஆப்நகரம்

24 மணி நேரத்திற்கு தண்ணீர் விநியோகம் நிறுத்தம்; எந்தெந்த பகுதிகளில்?

சீரமைப்பு பணிகள் காரணமாக தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் குறித்து விரிவாக காணலாம்.

Samayam Tamil 3 Dec 2020, 5:31 pm
மகாராஷ்டிர மாநிலம் தானே மாநகராட்சியில் நாளைய தினம் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது டிசம்பர் 4ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி டிசம்பர் 5ஆம் தேதி காலை 9 மணி வரை தண்ணீர் விநியோகம் செய்யப்படாது. இதுதொடர்பாக தானே மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஷாஹத் டெம்கார் தண்ணீர் விநியோக நிறுவனத்தில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கப்படாது.
Samayam Tamil Water Supply Cut


அதாவது ஹர்தாஸ் நகரில் சாலைக்கு கீழே நடைபெறும் மெட்ரோ பணிகளை ஒட்டி வால்வுகள் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதன் காரணமாக, கோத்பந்தர் ரோடு, காந்தி நகர், கிசான் நகர், வாக்லே எஸ்டேட், எடர்நிட்டி மால் மற்றும் ஜான்சன் & ஜான்சன் பகுதிகளில் தண்ணீர் வசதி நிறுத்தம் செய்யப்படுகிறது.

மேலும் சமதா நகர், இந்திரா நகர், கோத்தார காம்பவுண்ட், லோக்மான்ய நகர், ஸ்ரீ நகர், தானே ஜெயில், சாகெத், மும்ரா, கல்வா பகுதியை ஒட்டிய இடங்களிலும் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இன்னும் இரண்டே நாள் தான்; விவசாயிகளால் மொத்தமா முடங்கப் போகும் இந்தியா!

எனவே பொதுமக்கள் உரிய மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். போதிய தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த இரண்டு நாட்கள் மிகவும் சிக்கனமாக தண்ணீரைப் பயன்படுத்துங்கள்.

விரைவில் பணிகள் நிறைவு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான தண்ணீரை தொடர்ந்து விநியோகிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி