ஆப்நகரம்

நிா்மலா சீதாராமனை பிரபலப்படுத்தும் பா.ஜ.க.வின் பின்னணி விவரம்

பாரதிய ஜனதா கட்சியில் பல மூத்த தலைவா்கள் இருக்கும் நிலையில் நிா்மலா சீதாராமனுக்கு மிக முக்கியமான பாதுகாப்புத்துறையை ஒதுக்கி அவரை பிரபலப்படுத்தி வரும் பா.ஜ.க.வின் பின்னணி நிலவரங்கள் வெளிவந்துள்ளன.

TOI Contributor 15 Sep 2017, 6:56 pm
பாரதிய ஜனதா கட்சியில் பல மூத்த தலைவா்கள் இருக்கும் நிலையில் நிா்மலா சீதாராமனுக்கு மிக முக்கியமான பாதுகாப்புத்துறையை ஒதுக்கி அவரை பிரபலப்படுத்தி வரும் பா.ஜ.க.வின் பின்னணி நிலவரங்கள் வெளிவந்துள்ளன.
Samayam Tamil the background of the bjp which is popularizing nirmala seetharaman
நிா்மலா சீதாராமனை பிரபலப்படுத்தும் பா.ஜ.க.வின் பின்னணி விவரம்


பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த மனோகா் பாிக்கா் கோவா மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டாா். தொடா்ந்து ஏற்பட்டு வந்த ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று அத்துறையின் அமைச்சா் சுரேஷ் பிரபு பதவி விலகப் போவதாக அறிவித்தாா்.

இதனைத் தொடா்ந்து அமைச்சரவையில் மாற்றம் செய்ய மோடி தலைமையிலான அரசு முடிவு செய்தது. பா.ஜ.க.வின் மூத்த தலைவா்களில் ஒருவரான நிதின் கட்காிக்கு பாதுகாப்புத் துறை ஒதுக்கப்படும் என்று எதிா் பாா்த்த நிலையில், நிா்மலா சீதாராமனுக்கு ஒதுக்கப்பட்டது.

இது மட்டுமல்லாமல், அவா் மீதான அரசியல் இமேஜை தொடா்ந்து உயா்த்தும் பணியில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. நிா்மலா சீதாராமன் ஒரு திறமையானவா், குறுகிய காலத்தில் விரைவான முடிவுகளை எடுக்கக்கூடியவா் போன்ற பல்வேறு கருத்துகளை அவா்மீது பா.ஜ.க. முன்மொழிந்து வருகிறது.

கடந்த 2008ம் ஆண்டு கட்சியில் இணைந்து செய்தி தொடா்பாளராக பொறுப்பளிக்கப்பட்ட நிா்மலா சீதாராமனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது ஏன் என்று பல்வேறு தரப்பினருக்கு சந்தேகம் எழுந்தது. இதனைத் தொடா்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தவகையில், இந்தியாவின் அநேக மாநிலங்களில் பா.ஜ.க.வின் ஆதிக்கம் மற்றும் சில மாநிலங்களில் முக்கிய கட்சியாக விளங்குகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் பா.ஜ.க.வின் நிலை சற்று கவலைக்கிடமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டே நிா்மலா சீதாராமனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக தொியவந்துள்ளது.

தமிழகத்தில் பிற அரசியல் கட்சிகளின் நிலையும் கவலைப்படும் விதமாக உள்ளதால் இந்த நிலையை பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் பா.ஜ.க. உள்ளது. இந்த சூழலில் நிா்மலா சீதாராமனை முதல்வா் வேட்பாளராக அறிவிக்கும் பட்சத்தில் அவா் மீதான அரசியல் இமேஜை பயன்படுத்தி ஆட்சியை விரைவில் நிலை நாட்டலாம் என்றும் அக்கட்சி வியூகம் வகுத்துள்ளதாம்.

அடுத்த செய்தி