ஆப்நகரம்

அரசியலமைப்பு சட்டத்தை பாஜக கேவலப்படுத்தியுள்ளது - விசிக

மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் அரசியல் திருப்பத்தை குறித்து விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 23 Nov 2019, 2:04 pm
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த தேர்தலில் பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார்கள். இந்த கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து முதல்வர் பதவிக்கு இரு கட்சிகளுக்குள்ளும் உரிமை போர் நடந்தது.
Samayam Tamil அரசியலமைப்பு சட்டத்தை பாஜக கேவலப்படுத்தியுள்ளது - விசிக


இதனால் அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஆனால் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் சிவசேனா வசம் இருந்ததால் அரசியல் அமைப்பு முறைப்படி சிவசேனா வேட்பாளர்தான் முதல்வர் ஆக வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தெரிவித்தார்.

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் இணைந்த பிறகு இந்த முடிவானது நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி உத்தர் தாக்கரே மகாராஷ்டிரா மாநில முதல்வராக பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டது.

மகாராஷ்டிரா: சிவசேனா தலைமையில் ஆட்சி அமைப்பது உறுதி- சரத் பவார்

ஆனால் இந்த கூட்டணி உடைக்கப்பட்டு தேசியவாத காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய பாஜக பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அதன்படி மகாராஷ்டிரா மாநில முதல்வராக பாஜக கட்சியின் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பொறுப்பேற்பார்கள் என தகவல் வந்தது.

அதனை தொடர்ந்து இருவரும் ஆளுநர் பகத் சிங் கோஷாரி முன்பு பதவியேற்றனர். இரவோடு இரவாக நடந்த இந்த கூட்டணி உடைப்பை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மகாராஷ்டிரா: ஜனநாயகத்தின் முகத்தில் கரி - ஸ்டாலின் விமர்சனம்!

அந்த வரிசையில் விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினரும், விசிக கட்சியின் பொது செயலாளருமான ரவிக்குமார் '' மகாராஷ்டிராவில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி பாஜகவின் மிரட்டல் அரசியலுக்கு சரிந்து விட்டது. அரசியலமைப்புச்சட்டத்தை உருவாக்கிக் கையளித்தபோது அதன் 70 ஆவது ஆண்டுதினத்தில் அதை பாஜக இப்படி கேவலப்படுத்தும் என புரட்சியாளர் அம்பேத்கர் கனவில்கூட நினைத்திருக்கமாட்டார் என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி