ஆப்நகரம்

கொரோனாவை ஒடுக்க கூடுதல் நிதி ஒதுக்கு..! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்...

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்

Samayam Tamil 24 Mar 2020, 4:35 pm
வெண்டிலேட்டர்கள், மாஸ்க் மருந்துப் பொருட்கள் போன்றவை தேவையான அளவு இருக்கவேண்டும் எனவும் மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த தேவையான நிதி ஒதுக்க வேண்டும் எனவும் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
Samayam Tamil கொரோனாவை ஒடுக்க கூடுதல் நிதி ஒதுக்கு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்


இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டாலும் தொற்று எண்ணிக்கையானது ஏறுமுகத்தை கண்டு வருகிறது. ஆகையால் மருத்துவமனையில் ஆய்வகங்கள், தனிமை வார்டுகள் ஆகியவற்றை கூடுதலாக அமைக்கக்கோரி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தற்போதைய சூழலில் நிறைய நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுவிட்டதால் பெரும்பாலானோர் ஊதியம் இல்லாமல் வேலையை இழந்துள்ளனர். ஆனால் அரசு, அதுகுறித்து எந்த இழப்பீடும் அறிவிக்கவில்லை. இன்று செய்தியாளர்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்; வருமான வரி கணக்கு தங்களுக்கு அவகாசம் ஜூன் 30 வரை நீடிக்கும் என்வும், கால தாமதமாக செலுத்தப்படும் வருமான வரிக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் 12%ல் இருந்து 9% ஆகா குறைக்கப்படுவதாகவும், பிற ஏடிஎம்களில் பணம் எடுக்க 3 மாதங்களுக்கு சேவை கட்டணம் இல்லை எனவும் கூறினார்.

கொரோனாவால் ஷட் டவுன் ஆகும் இந்தியா; பசியால் வாடப் போகும் ஏழைகள்- காத்திருக்கும் ஆபத்து!

கொரோனா எதிரொலியாக தொழில் நிறுவனங்களுக்கு இப்படியான சலுகையை மத்திய அரசு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி