ஆப்நகரம்

கள்ளச்சாராயம் குடித்து 62 பேர் பலி..! கொரோனாவை பின்னுக்கு தள்ளிய இழப்பு...

பஞ்சாப் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது.

Samayam Tamil 1 Aug 2020, 6:19 pm
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த நாட்களாக கள்ளச்சாராயம் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. அம்மாநிலத்தில் உள்ள படாலா, டர்ன் தரன், அமிர்தசரஸ் ஆகிய மூன்று மாவட்டங்களில் கடந்த 29 தேதியில் ஏற்பட்ட முதல் மரணம் மூலம் கள்ளச்சாராயம் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
Samayam Tamil punjab spurious liquor


அதன் பிறகு தொடர்ச்சியாக 3 மாவட்டங்களில் உள்ள 40 க்கும் மேற்பட்ட இடங்களில் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இறந்தவர்கள் அனைவருக்கும் முதலில் உடல் உறுப்புகள் செயலிழந்துள்ளன. கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்களில் இதுவரை 8 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக அவர்களிடம் இருந்து ஏராளமான பேரல்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் கலந்துள்ள விஷம் தன்மை கொண்ட பொருளால் குடித்தவர்கள் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

NEP 2019: மாணவர்கள் எதைக் கற்க வேண்டுமோ அதை அளிக்கிறது: பிரதமர் மோடி உரை

இதுவரை அம்மூன்று மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்ததில் 62 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்தவர்களை உடனடியாக கண்டறிந்து மருத்துவ பரிசோதனை செய்யும் நடவடிக்கையிலும், இச்சம்பவத்தில் யார் யார் எல்லாம் ஈடுபட்டிருக்கின்றனர் என்பதை குறித்தும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அடுத்த செய்தி