ஆப்நகரம்

3வது நாளாக எல்லையில் தொடரும் பதற்றம்; 2 சி.ஆர்.பி.எப், 2 காஷ்மீர் போலீசார் வீரமரணம்!

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் தொடரும் பதற்றம் காரணமாக, ராணுவத்தினர் மற்றும் போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Samayam Tamil 3 Mar 2019, 10:20 am
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Kashmir Border


அதில் 200 முதல் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்து, ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தன.

அதனை விரட்டி அடிக்கும் நடவடிக்கையில் இந்திய போர் விமானங்கள் ஈடுபட்டன. அப்போது மிக்-21 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் சென்ற விங் கமாண்டர் அபிநந்தன் மாயமானார். பின்னர் பாகிஸ்தானில் இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் அழுத்தம் கொடுக்கப்பட்டு, அபிநந்தன் விடுவிக்கப்பட்டு இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனால் பதற்றம் சற்று தணிந்ததாக கூறப்பட்டது. இருப்பினும் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

3வது நடைபெற்று வரும் தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப் வீரர்களும், 2 காஷ்மீர் போலீசார் வீரமரணம் அடைந்தனர். இதனால் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் எல்லைப் பகுதியில் 400 பதுங்கு குழிகளை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அடுத்த செய்தி