ஆப்நகரம்

பாஜக ஆட்சியில் இது மட்டும் தான் அபாரமாக வளர்ந்துள்ளது : கட்ஜூ விளக்கம்

இந்தியா வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என பாஜக கூறுவது வேடிக்கையாக இருப்பதாக முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.

TOI Contributor 20 May 2017, 1:04 pm
இந்தியா வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என பாஜக கூறுவது வேடிக்கையாக இருப்பதாக முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.
Samayam Tamil the expression jobless growth justice katju
பாஜக ஆட்சியில் இது மட்டும் தான் அபாரமாக வளர்ந்துள்ளது : கட்ஜூ விளக்கம்

கட்ஜூ குறிப்பிட்டுள்ளதாவது:
பாஜக மே 2014ல் பதவி ஏற்றுக்கொண்டதிலிருந்து இந்திய நாட்டின் வளர்ச்சி குறையத்தொடங்கியுள்ளது. எப்படி என சொல்கிறேன். 2009 - 2011 வரை இந்திய பொருளாதாரம் வளர்ந்தது. அதோடு வேலைவாய்ப்பு 9.5 லட்சம் உருவாக்கப்பட்டது.

ஆனால் 2015-2016ம் ஆண்டில் இந்த வேலைவாய்ப்பு 2 லட்சம் மட்டும் உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 2016ம் ஆண்டில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையுள்ள காலாண்டில் 2.5 லட்சம் சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதோடு ஐ.டி துறையிலும் பல நிறுவனங்களில் பணியாளர்களை வெளியேற்றும் நிலை உருவாகியுள்ளது.

வேலைவாய்ப்பு உருவாக்காமல் வளர்ச்சி எப்படி சாத்தியப்படும் என தெரியவில்லை. உற்பத்தி செய்யப்படும் பொருள் விற்க வேண்டுமாயின், அதை வாங்க மக்களிடம் பணம் இருக்க வேண்டும். பணம் இருக்க வேண்டுமாயின் அவருக்கு வேலையும், அதன் மூலம் கிடைக்கும் வருமானம் போதுமானதாக இருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பை உருவாக்காமல் இந்தியாவில் வளர்ச்சி சாத்தியப்படாது என பாஜகவை கிழிகிழி என கிழித்துள்ளார்.

அடுத்த செய்தி