ஆப்நகரம்

இமயமலையில் உள்ளது கரடியின் கால்தடம்- நேபாள ராணுவம்

பனிமனிதனின் காலடித் தடம் மக்காலு சிகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் கூறிய நிலையில், அது கரடியின் கால் தடம் என நேபாள நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 2 May 2019, 3:45 pm
பனிமனிதனின் காலடித் தடம் மக்காலு சிகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் கூறிய நிலையில், அது கரடியின் கால் தடம் என நேபாள நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil yeti polar man


பனிமனிதன் எட்டி என அழைக்கப்படுவது வழக்கம். இது ஸ்கூபி டூ உள்ளிட்ட கேலிச்சித்திரங்களில் வரும். பொதுவாக பனிமனிதன் ராட்சத உடலோடும் பெரிய கால்களோடும் இருப்பான், அவனது காலடித் தடங்கள் மிகப்பெரிதாக இருக்கும் என நம்பப்படுகிறது. வட துருவ பிரதேசங்களில் பனி மனிதனுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் தேதி இமயமலைத் தொடரின் மக்காலு சிகரத்தில், பனி மனிதனின் கால் தடத்தைக் கண்டுபிடித்ததாக இந்திய ராணுவம் தெரிவித்தது.ஆனால் அந்தக் காலடித் தடம் பனிமனிதனுடையது அல்ல என நேபாள ராணுவம் விளக்கம் கொடுத்துள்ளது.

அந்த கால் தடம் கண்டுபிடிக்கப்பட்ட போது, இந்திய ராணுவத்தினருடன் தாங்களும் அங்கிருந்ததாக நேபாள ராணுவம் குறிப்பிட்டுள்ளது. கால் தடம் குறித்து விசாரிக்கையில், கரடியின் கால் தடம் என உள்ளூர் மக்கள் கூறியதாகவும், அந்நாட்டு ராணுவம் கூறியுள்ளது.

அடுத்த செய்தி