ஆப்நகரம்

குரங்குகளுடன் வாழ்ந்த சிறுமி விவகாரத்தில் தொடரும் சர்ச்சை!

உத்தரப்பிரதேசத்தில் குரங்குகளுடன் வனப்பகுதியில் வசித்ததாகச் சொல்லப்படும் சிறுமி விவகாரத்தில் பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்தபடி உள்ளன.

TNN 12 Apr 2017, 8:00 pm
உத்தரப்பிரதேசத்தில் குரங்குகளுடன் வனப்பகுதியில் வசித்ததாகச் சொல்லப்படும் சிறுமி விவகாரத்தில் பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்தபடி உள்ளன.
Samayam Tamil the monkey girl story raises many questions
குரங்குகளுடன் வாழ்ந்த சிறுமி விவகாரத்தில் தொடரும் சர்ச்சை!


குறிப்பிட்ட சிறுமி, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பஹ்ரைச் வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டார். குறிப்பிட்ட வனப்பகுதியில் உள்ள காவல்நிலைய பொறுப்பாளர் விடுத்துள்ள அறிக்கையில், சிறுமி கண்டெடுக்கப்பட்டபோது உடையணிந்திருந்ததாகவும், குரங்குகளுடன் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

எனினும், காவல்துறை அதிகாரி அவ்தார் சிங் யாதவ், அந்தச் சிறுமியின் மனநிலை சரியாக இல்லாததால், பெற்றோர்கள் வனப்பகுதியில் கொண்டு விட்டிருக்கலாம் என்று தெரிவித்தார்.

ஆனால், சிறுமி கண்டுபிடிக்கப்பட்டபோது உடைகள் எதுவும் அணிந்திருக்கவில்லை என்றும், குரங்குகளுடன் இருந்ததாகவும் அதே பகுதியை சேர்ந்த வனத்துறை அதிகாரி ஜே.பி. சிங் கூறுகிறார்.

வனத்துறை பணியாளர்கள் அந்தச் சிறுமியை கண்டதும், அருகிலுள்ள கிராமத்தினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் அளித்ததாக அவர் தெரிவித்தார்.

இதைத் தவிர, சிறுமி கண்டுபிடிக்கப்பட்டபோது தானும் அங்கு இருந்ததாக சாட்சியளிக்கும் ஷோயிப், முதலில் சிறுமியை ஏற்றுக்கொள்ள மறுத்த காவல்துறையினர், பிறகு அனைவரின் வற்புறுத்தலினால்தான் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறுகிறார்.

குரங்குகளுடன் நிர்வாண நிலையில் காணப்பட்ட சிறுமியை மீட்கும் போது, குரங்குகள் அவரை விட மறுத்து சண்டையிட்டதில் ஏற்பட்ட காயங்கள் சிறுமியின் உடலில் காணப்பட்டதாக பல்ரிச் மருத்துவமனையின் தலைமை கண்காணிப்பாளர், மருத்துவர் டி.கே.சிங் கூறுகிறார்.

இந்த விவகாரத்தில் மத பின்னணி இருக்கலாம் என்றும் சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.

Uttar Pradesh: The monkey girl raises many questions.

அடுத்த செய்தி