ஆப்நகரம்

ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும் மக்களுக்கு கும்பிடு போட்டு திருத்தும் காவல்துறை அதிகாரி !

ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வண்டி ஓடுபவரிடம் ஓட்டுபவரிடம் காசு வாங்காமல் கையெடுத்து கும்பிட்டு ஹெல்மட் அணிய வைக்கிறார் ஆந்திர காவக்துறை அதிகாரி.

TNN 10 Oct 2017, 7:17 pm
ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வண்டி ஓடுபவரிடம் ஓட்டுபவரிடம் காசு வாங்காமல் கையெடுத்து கும்பிட்டு ஹெல்மட் அணிய வைக்கிறார் ஆந்திர காவக்துறை அதிகாரி.
Samayam Tamil the police pleading the man who not flowing traffic rules
ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும் மக்களுக்கு கும்பிடு போட்டு திருத்தும் காவல்துறை அதிகாரி !

ஆனந்தப்பூர் மாவட்டம் மடகாசிரா பகுதி இன்ஸ்பெக்டராக இருப்பவர் சுகுப் குமார். இவர் சாலை விழிப்பு உணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, காவல் நிலையத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, எதிரே ஹனுமந்த்ரையா என்பவர் பைக்கில் குடும்பத்துடன் வந்துள்ளார்.

ஹனுமந்த்ரையாவின் மனைவி, மகள், இரு மகன்களு இருச்சக்கர வாகனத்தில் சென்றனர்.
ஹனுமந்த்ரையாவின் இருசக்கர வாகனத்தில் 5 பேர் கொண்ட அவரின் குடும்பத்தைச் சுமந்தே அடிக்கடி பயணிப்பார். இவரிடம் பல முறை சுகுப் குமார் சொல்லிபார்த்தும் அவர் கேடப்பாடில்லை . இதனால் இந்த முறை வித்தியாசமான முறையில் நடந்துகொண்டார்.

ஹனுமந்த்ரையாவின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி, அவரைப் பார்த்து இரு கரங்களையும் தூக்கி பெரியக் கும்பிடு போட்டார். இன்ஸ்பெக்டர் எங்கே அபராதம் விதிப்பாரோ என்று பயந்து போயிருந்த ஹனுமந்த்ரையாவுக்கு அவர் கும்பிடு போட்டதும் வெட்கமாகிப் போனது. இனிமேல் ,விதிகளை மீறி இரு சக்கர வாகனம் ஓட்டுவதில்லை என்று இன்ஸ்பெக்டருக்கு உறுதியளித்தார்.

the police pleading the man who not flowing traffic rules

அடுத்த செய்தி