ஆப்நகரம்

இந்தியாவில் 101 பெரும் பணக்காரர்கள் - முகேஷ் அம்பானிக்கு முதலிடம்..!

இந்தியாவில் 101 பெரும் பணக்காரர்கள் இருப்பதாக ஃபோர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.

TOI Contributor 21 Mar 2017, 3:27 pm
இந்தியாவில் 101 பெரும் பணக்காரர்கள் இருப்பதாக ஃபோர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.
Samayam Tamil the richest indians on the forbes list
இந்தியாவில் 101 பெரும் பணக்காரர்கள் - முகேஷ் அம்பானிக்கு முதலிடம்..!


உலகின் மிகப் பெரும் பணக்காரர்களின் சொத்துமதிப்பை கணக்கிட்டு அதனை வரிசைப்படுத்தி ஃபோர்ப்ஸ் இதழ் அறிவித்துள்ளது. இதில், தொடர்ந்து 4 ஆண்டுகளாக மைக்ரோ சாப்ட் நிறுவன அதிபர் பில்கேட்ஸ் முதலிடத்தில் உள்ளார். அதிக பணக்காரர்களை கொண்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 4வது இடத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதேபோல், இந்தியாவில் 101 மிகப் பெரிய பணக்காரர்கள் இருப்பதாகவும் போர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது. அதில், முகேஷ் அம்பானி 23.2 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் இந்தியாவில் முதலிடத்திலும், உலகளவில் 33வது இடத்தையும் பிடித்துள்ளார். லட்சுமி மிட்டல் 2வது இடத்திலும், உலகளவில் 56 இடத்தையும் பிடித்துள்ளார்.

மூன்றாவது இடத்தில விப்ரோ நிறுவன அதிபர் அஸிம் பிரேம்ஜி. இவரின் சொத்து மதிப்பு 15.9 பில்லியன் டாலர்கள். உலகளவில் 72 இடம். இவர்களைத் தவிர குமார் பிர்லா, அனில் அம்பானி, திலிப் சங்வி, சசி,சாவித்ரி ஜின்டால் மற்றும் குடும்பத்தினர், சுனில் மிட்டல் மற்றும் குடும்பத்தினர், ரவி ரூயா, குஷால் பால் சிங் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

அடுத்த செய்தி