ஆப்நகரம்

பாலியல் புகாரை நிரூபிக்க சாமியருக்கு ஆண்மை பரிசோதனை

சட்ட கல்லூரி மாணவி கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சாமியாருக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

TNN 25 Sep 2017, 8:18 pm
சட்ட கல்லூரி மாணவி கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சாமியாருக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil the saint in chhattisgarh asks to test for masculinity
பாலியல் புகாரை நிரூபிக்க சாமியருக்கு ஆண்மை பரிசோதனை


சட்டீஸ்காரை சேர்ந்த 21 வயது சட்ட கல்லூரி மாணவி ஒருவர் இந்த மாத தொடக்கத்தில் ஆழ்வார் நகர பாலியல் வன்கொடுமை புகார் ஒன்று அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சாமியார் கவுசலேந்திரா பிரபன்னச்சாரி பலஹரி மகாராஜ் என்பவர் கடந்த சனிக்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து வருகிற அக்டோபர் 6ந்தி வரை அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.
அவரது அறையில் இருந்து மடிக்கணினிகள், சி.டி.க்கள் மற்றும் பிற பொருட்கள், சி.சி.டி.வி. காட்சிகள் ஆகியவை காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது. அவை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

அந்த மாணவியின் பெற்றோர் சாமியாரின் சீடர்களாக உள்ளனர். இந்நிலையில், சாமியாருக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதன் மாதிரிகளை பரிசோதித்து உறுதிப்படுத்துவதற்காக அவை தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளன.



the saint in chhattisgarh asks to test for masculinity

அடுத்த செய்தி