ஆப்நகரம்

Thug life: விசாரணையின் போது ஹூக்கா இழுத்த மூத்த வழக்கறிஞர்..!

ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் ஆன்லைன் விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர் ஹூக்காவை புகைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

Samayam Tamil 14 Aug 2020, 2:44 pm
ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் காங்கிரஸில் இணைந்ததை எதிர்த்து பாஜக எம்எல்ஏ மதன் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
Samayam Tamil hookah during hearing


அந்த விசாரணையை ராஜஸ்தான் உயர்நீதிமன்ற ஜெய்ப்பூர் பெஞ்ச் கடந்த புதன்கிழமை அன்று வீடியோ காலில் தொடங்கியது. நீதிபதி மகேந்திர குமார் கோயல் தலைமையில் நடைபெற்ற அமர்வில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ராஜிவ் தவான், காங்கிரஸ் கட்சி சார்பில் கபில் சிபல் என இரு மூத்த வழக்கறிஞர்களும் ஆஜராகி வாதாடினர்.

அப்போது, பகுஜன் சமாஜ் சார்பில் வாதாடிய ராஜிவ் தவான் கையில் வைத்திருந்த பேப்பரை கொண்டு தன்னுடைய முகத்தை மறைந்து எதையோ செய்து கொண்டிருந்தார். இதை கவனித்து கொண்டிருந்த நீதிபதி மற்றும் வழக்கறிஞரும் தவான் வைத்திருந்த பேப்பருக்கு பின்னால் இருந்து புகை வெளிவந்ததை கண்டு அதிர்ந்தனர்.


அதை கூர்ந்து கவனித்ததில், ராஜிவ் தவான் பைப்பின் மூலம் ஹூக்கா இழுத்துக்கொண்டிருந்தது தெரிய வந்தது. விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர் இப்படி நடந்துகொண்டதால் நீதிபதியை முகம் சுழிக்க வைத்தது. பின்னர் ராஜிவ் தவானுக்கு அறிவுரை வழங்கிய நீதிபதி மகேந்திர குமார் கோயல், உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் இந்த வயதில் புகைபிடிப்பதை விட்டுவிடுமாறு அறிவுறுத்தினார். இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு கலவரத்தை பற்றவைத்த தீப்பொறி இதுதான்; அதுவும் அரசியல் ட்விஸ்ட்!

இதுபோன்று கடந்த ஜூன் மாதம் உச்ச நீதிமன்றம் நடத்திய வீடியோ வாயிலான விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர் கட்டிலில் படுத்துக்கொண்டே வாதாடிய நிகழ்வு சர்ச்சையானது குறிப்பிடத்தக்து.

அடுத்த செய்தி