ஆப்நகரம்

கொரோனா: 'பள்ளிகளை உடனே மூடுங்கள்'... மாநில அரசு அவசர உத்தரவு..!

டெல்லி: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைத்து பள்ளிகளையும் மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 9 Apr 2021, 6:05 pm
டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும்வரை பள்ளிகள் மூடப்படுவதாக மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil file pic


டெல்லியில் கொரோனா பரவல் வேகமெடுத்து வரும் நிலையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைகளை நடத்தி வருகிறார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது.

அந்த வகையில், டெல்லியில் வருகிற 30ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அத்தியாவசிய பணிகளை தவிர மற்ற பணிகளுக்கு பொதுமக்கள் வெளியே வந்து செல்லவும், கூட்டம் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் ரயில் சேவை நிறுத்தமா? இந்திய ரயில்வே முக்கியத் தகவல்!

டெல்லியில் நேற்றைய நிலவரப்படி, 7,437 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல, கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டு வந்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அதில் 5 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி