ஆப்நகரம்

நமது ராணுவத்தில் ஆயுதம் பத்தலயாம்; சண்டைனா 10 நாள் கூட தாக்குப் பிடிக்காதாம்...!

இந்திய ராணுவத்தில் போதிய ஆயுதங்கள் இல்லை என்று தெரியவந்துள்ளது.

TNN 22 Jul 2017, 2:17 pm
டெல்லி: இந்திய ராணுவத்தில் போதிய ஆயுதங்கள் இல்லை என்று தெரியவந்துள்ளது.
Samayam Tamil there is lack of weapons in indian army
நமது ராணுவத்தில் ஆயுதம் பத்தலயாம்; சண்டைனா 10 நாள் கூட தாக்குப் பிடிக்காதாம்...!


நாட்டு மக்கள் அமைதியான வாழ்க்கையை பேண, எல்லையில் ராணுவத்தினர் பங்கு மிக முக்கியம். அதற்கு அவர்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். மேலும் போர் என்று வந்தால் தயார் நிலையில் இருக்க வேண்டும். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் கணக்கு தணிக்கையாளர் குழு சார்பில் அறிக்கை ஒன்று சமர்பிக்கப்பட்டது. அதில் இந்திய ராணுவத்தில் காணப்படும் ஆயுதப் பற்றாக்குறை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீண்ட காலமாக ஆயுதப் பற்றாக்குறை நிலவி வருவது தெரியவந்துள்ளது.

2013ஆம் ஆண்டு சி.ஏ.ஜி அறிக்கை:

* 50% ஆயுதப் பற்றாக்குறை

* மொத்தமுள்ள 170 வகை ஆயுதங்களில் 85 வகை ஆயுதங்கள், போர் தொடங்கிய 10 நாட்களில் தீர்ந்துவிடும்.

2016ஆம் ஆண்டு சி.ஏ.ஜி.அறிக்கை:

* 40% ஆயுதப் பற்றாக்குறை

கடந்த 3 ஆண்டுகளில் 10% ஆயுதத் தேவை மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய அறிக்கையின்படி, ஒட்டுமொத்த 152 வகை ஆயுதங்களில் 61 வகை ஆயுதங்கள், போர் தொடங்கிய 10 நாட்களுக்குள் தீர்ந்துவிடும். இதற்கிடையில் ஆயுதப் பற்றாக்குறையால் ராணுவப் பயிற்சியின் நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு துரித நடவடிக்கையில் ஈடுபடுவதே இதற்கு தீர்வாக அமையும்.

There is lack of weapons in Indian Army.

அடுத்த செய்தி