ஆப்நகரம்

தாமரைக்கு தேசிய மலர் அந்தஸ்து வழங்கப்படவில்லை – மத்திய அரசு

தாமரை உள்பட எந்தவொரு மலருக்கும் தேசிய மலர் என்ற அந்தஸ்து வழங்கப்படவில்லை என்று உள்துறை இணைஅமைச்சர் நித்யானந்த ராய் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 11 Jul 2019, 10:06 am
புலி தேசிய விலங்காகவும், மயில் தேசிய பறவையாகவும் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், தேசிய மலராக எந்தவொரு மலருக்கும் அந்தஸ்து வழங்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil Lotus


தேசிய விலங்கு புலி, தேசிய பறவை மயில், தேசிய மலர் தாமரை என்று பலரும் அறிந்திருந்த நிலையில், மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்ட தகவல் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில், மாநிலங்களவையில் நேற்று உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் அளித்த பதிலில், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சகத்தின் சார்பில் கடந்த 2011ம் ஆண்டு புலிக்கு தேசிய விலங்கு அந்தஸ்து அளிக்கப்பட்டு அறிக்கை வெளியானது.

அதே போன்று தேசிய பறவையாக மயில் அங்கீகரிக்கப்பட்டு அறிக்கை வெளியானது. ஆனால், அந்த அமைச்சகத்தின் சார்பில் தேசிய மலர் என்ற அந்தஸ்து எந்த மலருக்கும் அளிக்கப்படவில்லை.

அவ்வாறு எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை என்று இணை அமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி