ஆப்நகரம்

ஓடும் ரயிலில் பயணிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து 15 லட்சம் கொள்ளை

ராஜஸ்தானில் ஒடும் ரயிலில் பயணிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

TOI Contributor 17 Aug 2017, 4:00 pm
ராஜஸ்தானில் ஒடும் ரயிலில் பயணிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Samayam Tamil thieves strike on august kranti rob passengers of over rs 15 lakh
ஓடும் ரயிலில் பயணிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து 15 லட்சம் கொள்ளை


மும்பையிலிருந்து டெல்லி வரை செல்லும் ராஜதானி எக்ஸ்பிரஸில் புதனன்று மத்தியப்பிரதேசம் அருகே செல்லும் போது பயணிகளின் பொருட்கள் அடுத்தடுத்து திருடு போனதாக ரயில்வே நிர்வாக்தி்ற்கு அடுத்தடுத்து புகார்கள் வந்தன.

இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தியதில், முதல் வகுப்பு ஏசி பெட்டிகளை குறிவைத்து இந்த கொள்ளை சம்பவம் நடத்தப்பட்டது என்று தெரியவந்துள்ளது. 7 பெட்டிகளில் பயணம் செய்த 25 பயணிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து, அவர்களின் உடமைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், கொள்ளை போன பொருட்களின் மதிப்பு சுமார் 15 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்
.
இது குறித்து ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறுகையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி நடந்த இந்த கொள்ள சம்பவள் துரதிருஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளார்.

உடைமைகளை பறிகொடுத்த பயணிகள், ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியம் தான் இந்த கொள்ளை சம்பவத்திற்கு காரணம் என்றும் இரயில்களில் சிசிடிவி காமிரா வைக்க வேண்டும் என்றும் ரயில்வே போலீசாருடன் வாதமிட்டனர்.

அடுத்த செய்தி