ஆப்நகரம்

கேரளா முதல்வராக பினராயி விஜயன் பதவியேற்பு

கேரள மாநில முதல்வராக பினராயி விஜயன் இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். இவருக்கு வயது 72.

TOI Contributor 25 May 2016, 6:18 pm
கேரள மாநில முதல்வராக பினராயி விஜயன் இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். இவருக்கு வயது 72.
Samayam Tamil thiruvananthapuram ldfs pinarayi vijayan takes oath as the cm of kerala
கேரளா முதல்வராக பினராயி விஜயன் பதவியேற்பு


திருவனந்தபுரம் மத்திய ஸ்டேடியத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் இவருக்கு மாநில கவர்னர் சதாசிவம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இவரைத் தொடர்ந்து அந்த மாநிலத்தின் 18 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். Thiruvananthapuram: LDF's Pinarayi Vijayan takes oath as the CM of Kerala pic.twitter.com/RT7Kd7RK0c— ANI (@ANI_news) May 25, 2016 கேரள மாநிலத்தில் இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வந்தது. தற்போது இடது சாரி முன்னணி ஆட்சியைப் பிடித்துள்ளது.

இன்று நடந்த முதல்வர் பதவியேற்பு விழாவில் மூத்த அரசியல் கட்சித் தலைவர்கள் வி.எஸ். அச்சுதானந்தன், சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் கரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநிலத்தில் தேர்தல் நடைபெற்ற 140 தொகுதிகளில் 91 இடங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணி கூட்டணி கைப்பற்றியது. முதல்வர் பதவிக்கு 92 வயதாகும் முன்னாள் அச்சுதானந்தன் முதல்வர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்டார். ஆனால், கட்சித் தலைமை அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. பினராயியை தேர்வு செய்தது.

அடுத்த செய்தி