ஆப்நகரம்

5 ஆண்டுகளில் 3,515 விவசாயிகள் தற்கொலை; சோகத்தில் மூழ்கித் தவிக்கும் கர்நாடகம்!

விவசாயிகள் ஆயிரக்கணக்கில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 28 Dec 2017, 12:15 pm
பெங்களூரு: விவசாயிகள் ஆயிரக்கணக்கில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil thousands of karnataka farmers were suicide in 5 years
5 ஆண்டுகளில் 3,515 விவசாயிகள் தற்கொலை; சோகத்தில் மூழ்கித் தவிக்கும் கர்நாடகம்!


கடும் வறட்சி, போதிய நிதியின்மை போன்ற காரணங்களால் நாடு முழுவதும் விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

அவர்களில் சிலர் விரக்தியால் தற்கொலை செய்து கொண்டனர். இதில் கர்நாடகாவில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை 3,515 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.

மேலும் 2015-2017 காலக்கட்டத்தில் 2,514 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுதொடர்பாக கர்நாடக மாநில வேளாண்மை திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 2,525 பேர் பயிர் பாதிப்பு, வறட்சி ஆகிய காரணங்களால் தற்கொலை செய்துள்ளனர். அதில் கரும்பு விவசாயிகள் முதலிடத்தில் உள்ளனர். இதையடுத்து பருத்தி மற்றும் நெல் விவசாயிகள் உள்ளனர்.

தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் ரூ.1 முதல் ரூ.5 லட்சம் வரை நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது.

Thousands of Karnataka farmers were suicide in 5 years.

அடுத்த செய்தி